செவ்வாய், 5 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-41

வெற்றிக்களிப்பை 
பகிர்ந்து கொள்ள 
ஒரு விரல்

எல்லாப்பழியும் 
உன்மீது சுட்ட 
ஒரு விரல் 

அகத்து வன்மத்தை 
புறத்தே காட்ட 
ஒரு விரல் 

அன்புப்பரிசை 
அழகாய் சுமக்க 
ஒரு விரல் 

இயற்கை உபாதையை 
நாசூக்காய் சொல்ல 
ஒரு விரல் 

நல்ல வேலை 
எல்லா விரலும் 
ஒரே மாதிரி இல்லை!

கருத்துகள் இல்லை: