செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

வெளிக்கோணம்


சின்னத்தம்பி சின்னப்பாப்பா
முக்கோணத்தின் பண்புகளில்
முக்கியமான பண்பு ஒன்றை
மெட்டுக்கட்டி பாட்டிலே
பாடப்போறேன் கேட்டுக்கோ...

ஒருமுக்கோணத்தின் ஏதேனுமொரு
பக்கத்தை நீட்டினால்
ஏற்படும் வெளிக்கோணம்
அதன் உள்ளெதிர்க் கோணங்களின்
கூடுதலுக்குச் சமமாகும்...

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

கணிதமேதை யூக்ளிட்பெங்கலி பெங்கா பெங்கலி பெங்கா
பெங்கலி பெங்காலே...
பெங்கலி பெங்கா பெங்கலி பெங்கா
பெங்கலி பெங்காலே...

கிரேக்கக்கணித மேதையான
யூக்ளிட்தானே...
வடிவியலின் தந்தையென்று
போற்றப்பட்டாரே... (பெங்கலி பெங்கா...)

தர்க்க அடிப் படையிலான
சிந்தனைகளை...
வடிவியலில் முதன்முதலாய்
கொண்டுவந்தாரே... (பெங்கலி பெங்கா...)

யூக்ளிட் எலமன்ட்ஸ் என்ற
புத்தகங்களை...
(கி.மு.)- முந்நூறில்
நமக்கு தந்தாரே... (பெங்கலி பெங்கா...)

ஒருமுழுமை அதன் எந்த
பகுதிகளை விடவும்...
பெரியதாகும் என்ற கருத்தை
நமக்கு சொன்னாரே... (பெங்கலி பெங்கா...)

சனி, 18 ஆகஸ்ட், 2012

முக்கோணம்ஆசையாக பென்சில் எடுத்து
ஒரு புள்ளி வைத்து நானும்
முக்கோணத்தை வரைந்து பார்த்தேன்
வரவேயில்லை!முக்கோணம் வரவேயில்லை!

அருகருகே அமையுமாறு
இரண்டு புள்ளி வைத்து நானும்
முக்கோணத்தை வரைந்து பார்த்தேன்
வரவேயில்லை!முக்கோணம் வரவேயில்லை!

நேர்க்கோட்டில் அமையுமாறு
மூன்று புள்ளி வைத்து நானும்
முக்கோணத்தை வரைந்து பார்த்தேன்
வரவேயில்லை!முக்கோணம் வரவேயில்லை!

நேர்க்கோட்டில் அமையாமல்
மூன்று புள்ளி வைத்து நானும்
முக்கோணத்தை வரைந்து பார்த்தேன்
ஆகா!வந்துவிட்டது!முக்கோணம் வந்துவிட்டது!

புதன், 15 ஆகஸ்ட், 2012

ஹைக்கூ-4


ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்
உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்
ஓ...இன்று சுதந்திர தினம்!

சனி, 11 ஆகஸ்ட், 2012

திசைப்பாடல்


கொக்கரக்கோ சேவல் ஒண்ணு
சத்தமாக கூவுதம்மா
சத்தமாக கூவியதால்
நித்திரையும் கலைந்ததம்மா!

கிழக்காலே சூரியனும்
காலையிலே தோணுதம்மா
காலையிலே தோணுகையில்
தாமரைப்பூ பூக்குதம்மா!

மேற்காலே சூரியனும்
மாலையிலே மறையுதம்மா
மாலையிலே மறைகையில்
அல்லிமலர் பூக்குதம்மா!

வடக்காலே இமயமும்
வானுயர நிக்குதம்மா
வானுயர நிக்குமது
இந்தியாவைக் காக்குதம்மா!

தெற்காலே குமரியில்
முக்கடலின் சங்கமமம்மா
முக்கடலின் சங்கமத்தில்
வள்ளுவரின் சிலையம்மா!