புதன், 23 ஜூலை, 2014

322ஆலகோ மந்திரம் தெரியுமா?

ஒரு எட்டு இலக்க எண்ணைக் கொடுத்து அதன் எண்பெயர் கேட்டால் மீத்திறன் மிக்க மாணவர்களைத்தவிர்த்து மீதி அனைவரும் அந்த எண்ணின் பெயரை சட்டென்று வாசிப்பதற்கு தடுமாறுபவர்களாகவே இருக்கின்றனர்.
அவர்களுக்கு அதிகப்படியான பயிற்சி கொடுக்கவே இந்த 322ஆலகோ மந்திரம்!
இந்த மந்திரம் எப்படி வேலை செய்கிறது என்பதை சோதித்துப் பார்த்துவிட்டு தங்கள் பின்னூட்டத்தை அளித்தீர்களானால் மேற்கொண்டு என்னுடைய கணித முயற்சிகளை தொடர்வதற்கு அது உதவிகரமாக இருக்கும்.
சரி இப்போது மந்திரத்துக்கு வருவோம்!
ஒரு எட்டு இலக்க எண்ணை எடுத்துக்கொள்வோம்.
12345678-வலமிருந்து இடமாக 3இலக்கங்கள் பின்பு 2இலக்கங்கள் பின்பு மீண்டும் 2இலக்கங்கள் தள்ளி காற்புள்ளி இட வேண்டும் என்பதை வலியுறுத்தவே 322 என்று கொடுத்துள்ளேன்.
அடுத்தபடியாக மூன்றிலக்க எண்ணைப்படிப்பதில் மாணவர்களுக்கு அதிக சிரமம் இல்லை.எனவே வலமிருந்து இடமாக அடுத்த ஆயிரம்,பத்தாயிரம் இட இலக்கங்களுக்கு மேலே ஆயிரம் என்பதன் சுருக்கக் குறியீடாக ஆ என்ற எழுத்தையும், லட்சம்,பத்துலட்சம் இட இலக்கங்களுக்கு மேலே லட்சம் என்பதன் சுருக்கக் குறியீடாக ல என்ற எழுத்தையும், கோடி என்பதன் சுருக்கக்குறியீடாக கோ என்ற எழுத்தையும் குறிக்கும்படி செய்ய வேண்டும்.

கோ

1,
23,
45,
678

இப்போது ஒரு கோடியே, இருபத்துமூன்றுலட்சத்து, நாற்பத்தைந்தாயிரத்து, அறுநூற்றுஎழுபத்தெட்டு என எட்டு இலக்க எண்ணை மிக விரைவாகப் படிப்பார்கள்.நாளடைவில் மேலே எதுவும் சுருக்க குறியீடு எழுதாமலேயே, காற்புள்ளி வைக்காமலேயே விரைவாக படிக்கும் திறனை அடைவர்.
முயற்சித்துப்பார்த்துவிட்டு முடிவைக்கூறுங்கள்!!

தங்களின் பின்னூட்டதை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!!!

திங்கள், 7 ஏப்ரல், 2014

என்ன கிழமை?


நீங்கள் எந்த ஆண்டின் எந்த மாதத்தின் எந்த தேதியின் கிழமையையும் அறிந்து கொள்ள மிக எளிமையான புதிர்!

மாதத்தின் ரகசியக் குறி(ஜனவரி முதல் டிசம்பர் வரை):
”லீஃப்ஆண்டின்(7) முதல்(3) மாதம்(3) மட்டுமின்றி(6) நீ(1) அடுத்த(4) மாதத்திலும்(6) ஓர்(2) எண்ணிக்கை(5) குறைத்திட்டால்(7) கிழமை(3) பிழையாகுமா?(5)”

கிழமை காணும் முறை:
வருடமும், வருடத்தை நான்காக்கிய ஈவும், தேதியும், மாதத்தின் ரகசியக் குறியும் ஒன்றாக்கி, ஏழால் வகுக்கவரும் மீதி,
பூஜ்ஜியமெனில் வெள்ளி,
ஒன்றெனில் சனி,
இவ்வாறு முறை வைத்தால் கிழமை கிடைத்திடுமே!

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

புதிர்கள்

அதிக அளவிலான புதிர்க்கணக்குகளுக்கு என்னுடைய முகநூல் பக்கத்தை பார்வையிடவும்!https://www.facebook.com/kseenu.vasan