சனி, 11 ஆகஸ்ட், 2012

திசைப்பாடல்


கொக்கரக்கோ சேவல் ஒண்ணு
சத்தமாக கூவுதம்மா
சத்தமாக கூவியதால்
நித்திரையும் கலைந்ததம்மா!

கிழக்காலே சூரியனும்
காலையிலே தோணுதம்மா
காலையிலே தோணுகையில்
தாமரைப்பூ பூக்குதம்மா!

மேற்காலே சூரியனும்
மாலையிலே மறையுதம்மா
மாலையிலே மறைகையில்
அல்லிமலர் பூக்குதம்மா!

வடக்காலே இமயமும்
வானுயர நிக்குதம்மா
வானுயர நிக்குமது
இந்தியாவைக் காக்குதம்மா!

தெற்காலே குமரியில்
முக்கடலின் சங்கமமம்மா
முக்கடலின் சங்கமத்தில்
வள்ளுவரின் சிலையம்மா!

3 கருத்துகள்:

கவி அழகன் சொன்னது…

Nalla irukkuthu unkal kavi padal

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஒவ்வொரு திசையைப் பற்றியும் சிந்தித்து, அழகாக கவிதை படைத்துள்ளீர்கள்...

தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

விமலன் சொன்னது…

நல்ல உவமைப்பாடல்.வாழ்த்துக்கள்.