வெள்ளி, 27 ஜூலை, 2012

வடிவியல் உருவங்கள்
வண்ண நிலவோ வட்டம்
வட்டத்தை பாதியாக்கும்  விட்டம்!

வரைவேன் சதுரக் கட்டம்
வானத்தில் பறப்பது பட்டம்!

எழுதும் பலகை செவ்வகம்
எதிர் எதிர் பக்கங்கள் சமம்!

முக்கோணத்தின் கோணங்கள் மூன்று
அக்கோணங்களை  கூட்டினால் நூற்றுஎண்பது!

அடடா என்ன அருமையடா
வடிவியல் உருவங்கள் ஒவ்வொன்றும்!


3 கருத்துகள்:

Ramani சொன்னது…

இப்படி அழகாக விஞ்ஞானப்பாடங்களைக்
கூட சொல்லிக் கொடுத்துவிடலாம் போல இருக்கிறதே
அருமையான வித்தியாசமான சிந்தனை
தொடர வாழ்த்துக்கள்

பாலா சொன்னது…

இப்படி சொல்லிக்கொடுத்தால் மாணவர்கள் மனதில் இருந்து மறையவே மறையாது. நன்றி நண்பரே

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

குழந்தைகளுக்கு மனதில் உடனே பதியும்...
நன்றி...