வெள்ளி, 1 ஜூலை, 2011

மெட்டுப்பாடல்கள்-15

கொஞ்ச வந்த தாமரையே
அட இன்னும் என்ன தாமதமோ?
அக்கம் பக்கம் நான் மறப்பேன்
உன் வெட்கம் மட்டும் நீ துறந்தால்

கலையாத கனவாக கண்ணோடு ஒட்டிக்கொண்டாய்
தொலையாத நினைவாக நெஞ்சோடு ஒட்டிக்கொண்டாய்
கண்ணோடு கண்ணோடு நீ மட்டும் நீங்கவில்லை
என்னோடு என்னோடு நான் மட்டும் காணவில்லை 
*
ஏற்றி வைத்தேன் காதல் சூடம் 
சாட்சி அந்த கோயில் மாடம் 
கண்ணீரில்தான் வாழ்க்கை ஓடம் 
கரையை காட்டும் காதல் பாடம் 

உண்மை காதல் தோற்காதடி பெண்ணே
அது தோற்றுப்போனால் காதல் இல்லை கண்ணே

ராத்திரியில் பூத்திருக்கும் சின்ன சின்ன நட்சத்திரம் 
உன்னுடைய கூந்தலிலே சூடிவச்ச முல்லைச்சரம்
பூவாகத்தான் மாறிடவே தந்திடடி ஒரு வரம் 
*
உன்னோடுதான் காதல் மொட்டு 
பூக்கும் என்று சொல்லி விட்டு 
மோகத்தீயில் என்னை சுட்டு 
போனாயடி வண்ணச்சிட்டு 

உன்னைத்தானே தேடுதடி ஆவி 
நீ இல்லை என்றால் கட்டிக்கொள்வேன் காவி 

ஓரவிழி பார்வை பட்டால் பூமி எங்கும் நந்தவனம் 
உன்னுடைய பார்வை தொட ஏங்குதடி இந்த மனம் 
பார்வை என்னை தொட்ட பின்பே தூங்குதடி தினம் தினம் 
*
(குறிப்பு:கொஞ்ச நாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக்கொடி இங்கு வருவா என்ற பாடல் மெட்டு)

கருத்துகள் இல்லை: