வெள்ளி, 1 ஜூலை, 2011

மெட்டுப்பாடல்கள்-14

வீசும் தென்றல் நானாக வேண்டும்
வாசம் நீயே என்றால்
பூத்தாடும் வயசு
கூத்தாடும் மனசு
உனக்காக நித்தம் வாடுது
*
இரவில் வரும் நிலவாக
பகலை தரும் ஒளியாக
எல்லாமும் நீயாக தோன்றுகிறது

தூங்கும் போது நீளும் இரவே
ஏங்கும் போது தாங்கும் உறவே
பாக்கள் தரும் பூக்கள் என் ரத்தத்திலே

குயிலின் கானம் செவியை அள்ளும்
எந்தன் கானம் உயிரை கிள்ளும்
கானம் காதில் காதல் சொல்லும்
*
விரலில் ஒரு மோதிரமாய்
உனக்கே இரு இருதயமாய்
சொன்னாலே நானும் மாறிப்போவேன்

தேனை சிந்தும் காதல் பயிரே
வீணை மீட்டும் எந்தன் உயிரே
ஊடல்களும் தேடல்களும் நெஞ்சத்திலே

வண்டின் பாஷை பூக்கள் அறியும்
எந்தன் பாஷை கண்கள் அறியும்
பாசம் சொல்ல பாஷை வேண்டாம் 
*
(குறிப்பு:ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது என்ற பாடல் மெட்டு)

கருத்துகள் இல்லை: