வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

மெட்டுப்பாடல்கள்-22

பூவெல்லாம் பூத்திருக்கு
உன் வரவை பார்த்திருக்கு
என் வீட்டு தோட்டத்தில்
எங்கெங்கும் உல்லாசமே

திருநாள் தானடி வீதியில்
என் தேவதை நீ வரும் தேதியில்
என் ஜீவனை விடுவேன் பாதியில்
என் தேவதை மறையும் தேதியில்
*
பையோடு கோவில் செல்ல எதிரில் வந்தாயே
கையோடு மனதையும் சேர்த்து வாங்கி சென்றாயே
தென்றல்தான் உன்னைத்தொட்டு என்னைத்தழுவியது
உள்ளம்தான் என்னை விட்டு தானாய் நழுவியது

உன் நெற்றி பொட்டில் தானே
என் உயிரை ஒட்டி வைத்தாய்
நீ உடுத்தும் பட்டில் தானே
எனை நூலாய் கட்டி வைத்தாய்

உந்தன் கூந்தல் பூவாய் மாறவா?
நித்தம் ஊஞ்சல் நானும் ஆடவா?
*
கண்ணோடு கனவாய் வந்து என்னை எழுப்புகிறாய்
என்னோடு உறவாய் வரவே ஏனடி மழுப்புகிறாய்
மேகம்தான் உன்னை கண்டால் மழையாய் கொட்டுதடி
வானம்தான் கைகள் ரெண்டில் வசமாய் எட்டுதடி

அடி கடலை சேர நதியும்
ஒரு கப்பம் தருவதில்லை
அடி உடலை சேர உயிரும்
விண்ணப்பம் தேவையில்லை

இதய கதவை நீதான் உடைத்தாயோ?
காதல் உயிலை திருடிப் படித்தாயோ?
*
(குறிப்பு:பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா என்ற பாடல் மெட்டு)

7 கருத்துகள்:

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

நன்றாகவுள்ளது நண்பரே..

இன்றுதான் தங்கள் வலைப்பக்கம் முதலாவதாக வருகிறேன்.

அருமை.

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

இதய கதவை நீதான் உடைத்தாயோ?
காதல் உயிலை திருடிப் படித்தாயோ?

மிக நன்று.

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

இதய கதவை நீதான் உடைத்தாயோ?
காதல் உயிலை திருடிப் படித்தாயோ?

மிக நன்று.

thalir சொன்னது…

அருமையா இருக்கு! இதான் முதல் வருகை இனி தொடரும் வருகை!

அம்பாளடியாள் சொன்னது…

அருமையான பாடல்வரிகள் சகோ............

அம்பாளடியாள் சொன்னது…

திருநாள் தானடி வீதியில்
என் தேவதை நீ வரும் தேதியில்
என் ஜீவனை விடுவேன் பாதியில்
என் தேவதை மறையும் தேதியில்

உண்மைக்காதல் சொல்லும்வரிகள் அருமை .

அம்பாளடியாள் சொன்னது…

மொத்தத்தில் மெட்டுப்போட்டுப் பாடலாம் கலக்கல்
வரிகள் சகோ .தொடருங்கள் எம் ஆதரவை நல்கின்றோம் ...