இருப்பைக்கலைக்கும் உயிரோட்டமான
ஆற்றின் படித்துறையிலிருந்து
ஆற்றின் படித்துறையிலிருந்து
ஒவ்வொருவராய் வெளியேறுகையின் இறுதியில்
என் வேண்டுதலின் முடிவு தெரியாத
உன் வருகை பார்த்து மௌனியாய்
உடமையாக நீ விட்டுச்சென்ற
வாசம் சுமக்கும் வளியினை ஸ்பரிசித்தபடி
நினைவுச்சுவடுகளை தொடர்ந்தவாறு...
எனதன்பே சுவட்டின் எச்சங்கள்
முன்னாலுள்ள பட்டாம் பூச்சிகளாய்
சிறகடித்து பறக்கும்
அவற்றின் சிறகுகளை சிதைத்து விடும்
உறவுக்கான ஒப்பத்தை வெட்டியெறிந்து
என் உயிர்ப்பை இறந்து விடாதபடி
புன்னகைத்து பிரிவாய் என்றிப்படியே
காத்திருப்பின் கணங்களை நீட்டியபடி...
(மறைந்த என் தம்பி கு.செல்வக்குமார் நினைவாக)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக