நினைவே என் நினைவே
என்னை நீங்காதே
முள்ளில் ரோஜாவாய் பூத்தாய்
நீயின்றி நிலவில்லை
நீயின்றி மலரில்லை
நீயின்றி போனால்
ஊனோடு உயிரில்லை
நெஞ்சோடுதான் நீங்காமலே நீ வா
*
பொன் விரல்கள் பூத்தொடுக்க
நார் எனவே நானிருந்தேன்
உன் விழிகள் போர் தொடுக்க
அடிமையாக தானிருந்தேன்
தினம் தோறும் நீ சிரிக்க
தவம் செய்து காத்திருந்தேன்
உயிர் மலரை நீ பறிக்க
மௌனமாய் பார்த்திருந்தேன்
விண்ணோடு சேர முகிலுக்கு தயக்கமா?
கண்ணோடு சேர இமைகளுக்கு தயக்கமா?
நெஞ்சோடுதான் நீங்காமலே நீ வா
*
நீ போகும் பாதை எல்லாம்
தென்றலுக்கு சொல்லி வைத்தேன்
பூம்பாதம் நோகுமென்று
பூக்களை அள்ளி இரைத்தேன்
உனக்கொரு இன்பமென்றால்
மானாக துள்ளி குதித்தேன்
உனக்கொரு துன்பமென்றால்
நூலாக மெல்ல இளைத்தேன்
மண்ணோடு சேர மழைத்துளி ஏங்குதே
உன்னோடு சேர உயிர்த்துளி ஏங்குதே
நெஞ்சோடுதான் நீங்காமலே நீ வா
*
(குறிப்பு:காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே கண்ணீர் வழியுதடி கண்ணே என்ற பாடல் மெட்டு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக