திங்கள், 26 செப்டம்பர், 2011

வணக்கம் வைக்காதே!

ஒரு ஊர்ல ஒரு முதலாளிக்கிட்ட நிறைய பேர் வேலை செஞ்சாங்க.காலையில வந்த உடனே முதல் வேலையா முதலாளிக்கு வணக்கம் வச்சிட்டுத்தான் மறுவேலை பாப்பாங்க.ஆனா அதுல ஒருத்தருக்கும் முதலாளிக்கும் மனஸ்தாபம் ஆயிடுச்சு!அதுல இருந்து அந்த தொழிலாளி மட்டும் முதலாளிக்கு வணக்கம் வைக்கறத நிறுத்திட்டாரு!

இது முதலாளிக்கு மரியாதை குறைவா பட்டது!அவரும் அந்த தொழிலாளிய தனியே கூப்பிட்டு எனக்கு வணக்கம் வைக்க போறியா இல்லியான்னு மிரட்டினாரு!தொழிலாளி பயப்படுற மாதிரி தெரியல.நீ என்ன பண்ணுறியோ பண்ணிக்கோன்னு சொல்லிட்டாரு.முதலாளிக்கு ஆத்திரம் தாங்க முடியல!என்ன பண்ணலாம்னு யோசிச்சாரு.தினமும் தொல்லை கொடுத்தாரு!

இந்த விஷயம் எல்லா தொழிலாளிக்கும் தெரிஞ்சி போச்சி.ஆள் ஆளுக்கு கூடிப்பேச ஆரம்பிச்சிட்டாங்க!கொஞ்சம் பேரு முதலாளி பேர்லதான் தப்புன்னாங்க.கொஞ்சம் பேரு அந்த தொழிலாளி பேர்லதான் தப்புன்னாங்க!ஆனாலும் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்த மாதிரி தெரியல!தினம் தினம் பிரச்சனை பெரிசாகிகிட்டேதான் இருந்துச்சு!முடியவேயில்லை!

திடீர்னு ஒரு நாள் பிரச்சனை தலை கீழா மாறிடுச்சு!யாருக்கும் ஒண்ணுமே புரியல!அந்த தொழிலாளி காலையிலே வந்த உடனே முதல் வேலையா ஓடிப்போய் முதலாளிக்கு எல்லோரும் பாக்கற மாதிரி ரொம்ப பணிவா வணக்கம் சொல்றாரு!ஆனா முதலாளிக்கு பயங்கர கோவம் வருது! அதப்பத்தி கவலைப்படாம அந்த தொழிலாளி போய்ட்டாரு.

மறுநாளும் அதே மாதிரி அந்த தொழிலாளி அவர பாக்கறப்ப எல்லாம் ரொம்ப மரியாதையோட வணக்கம் வைக்கிறாரு. ஆனா முதலாளி ரொம்ப ரொம்ப கோவத்தோட உச்சிக்கே போயிடுறாரு!எனக்கு உன்னோட மரியாதை தேவையில்லை.
வணக்கம் வைக்காதேன்னு கத்தறாரு!அவரு ஏன் அப்படி மாறிட்டாருன்னு உங்க கமெண்ட்ல சொல்லுங்க!நான் அப்புறமா ஏன்னு உங்ககிட்ட மட்டும் சொல்றேன்!...




(அந்த தொழிலாளி முதலாளியை தனியா சந்திச்சி மரியாதை மனசில் இருந்து வரணும்.இது மாதிரி தொந்தரவு பண்ணி வரக்கூடாது .  நாளையிலர்ந்து நான் உனக்கு தினமும் வணக்கம் வைப்பேன்.ஆனா அந்த வணக்கத்துக்கு போட முண்டம்னு அர்த்தம் அப்பிடின்னு சொல்லிட்டானாம்! எப்பூடி?ஹி...ஹி...) 

8 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

ஏன்?

Yaathoramani.blogspot.com சொன்னது…

ஒரு ஆளு பத்துபேரை கிளப்பிவிட்டுவிட்டு
பின்னால நல்லவனா மாறிட்டேன்னு சொன்னா
கோபம் வரத்தானே செய்யும்

பாலா சொன்னது…

நண்பரே உங்கள் தளத்துக்கு வருவது இதுவே முதல் முறை. உங்கள் பதிவுகள் சிறப்பாக உள்ளன. மேலும் தொடரட்டும் உங்கள் பணி. நன்றி

Bharath Computers சொன்னது…

இப்போ நான் உங்களுக்கு வணக்கம் வைக்கனுமா? வேணாமா?

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஏன்? ஏ..ஏன்???

cheena (சீனா) சொன்னது…

அன்பின் சீனுவாசன் - கதை அருமை - ஏன் வணக்கம் வைத்தால் முதலாளிக்குப் பிடிக்க வில்லை என்பதற்குக் காரணம் ...ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Shanmugam Rajamanickam சொன்னது…

ஹா ஹா ,,,

Shanmugam Rajamanickam சொன்னது…

செம சிரிப்பு வருது,, தொடர்ந்து இந்த மாதிரியே எழுதுங்க,,,,