உந்தன் பிம்பம் விழுகின்ற பனித்துளி முத்தாகும்
உந்தன் அழகை காண்கின்ற மனமோ பித்தாகும்
ஒரு வானவில் உருவாக்குவேன்
உன் தாவணி நூல் கிடைத்தால்
தலைவியே நீ உரைத்தால்
*
அசையும் தென்னங்கீற்றோடு
உந்தன் அழகு குழலாடும்
முதன்முறை முத்தம் நான் கொடுத்த
நினைவுகள் வந்து நிழலாடும்
பொருள் கொடுத்து பூக்கச்சொன்னால்
பூக்கள் என்றும் பூக்காது
காசு பணம் எதனையுமே
காதல் என்றும் கேட்காது
நம் காதல்தான் இந்த பூமிக்கு
முன்மாதிரி ஆகுமே
என்றும் வாழுமே
*
இருவரும் இணையும் பொழுதுகளில்
தென்றலும் மத்தியில் நுழையாது
தேனொளி நம்மில் வீசிடவே
திங்களும் வருமே அழையாது
காரிகையே உன் உருவை
தூரிகை கொண்டா தீட்டுவது?
பேரழகை சித்திரத்தில்
எவ்விதம் வரைந்து காட்டுவது?
உயிர்ப் பூவினை உனக்காகத்தான்
இதுநாள் வரை சுமந்திருந்தேன்
உனக்கதை பரிசளிப்பேன்
*
(குறிப்பு:எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்ற பாடல் மெட்டு)
2 கருத்துகள்:
கவிதையான பாடல்...கலக்கலோடு பட்டைய கிளப்புது...நண்பரே.... நீங்க சொன்ன பாடல் மெட்டில் பாடிப்பார்த்தேன்... முதல் இரண்டு வரிகளும் இடித்தது... பாட பாட சுலபமானது வாழ்த்துக்கள் நண்பரே
சூப்பர்!
மெட்டுக்கான பாடல் இடம்பெறும்
படத்தின் பெயரையும் சேர்த்து
வெளியிட்டால்
இன்னும் சூப்பர்!
கருத்துரையிடுக