வெள்ளி, 9 செப்டம்பர், 2011

மெட்டுப்பாடல்கள்-26

அல்லி மலரே அல்லி மலரே
சந்திரனை மறந்தாயோ?
சந்திரனையே மறந்துவிட
எப்படித்தான் துணிந்தாயோ?

பல வாசமலர்களை பார்ப்பது என்னவோ உண்மைதான்
என் காதல் நெஞ்சம் கேட்பது என்னவோ உன்னைதான்
உனை எண்ணியே உடல் தேய்கிறேன்
உனக்காகவே உயிர் வாழ்கிறேன்
*
எந்தன் காதலை நானும் சொல்ல
எந்த மொழியிலும் வார்த்தை இல்லை
என்னை நீயும் உதறித் தள்ள
இந்த உயிருக்கு வாழ்க்கை இல்லை

கை ஓங்கும் முன்பாக
அடித்தார் போல் கத்தாதே
பூத்தொடுக்கும் பொன்விரலால்
என் விழியை குத்தாதே

உன்னோடு அடைக்கலமாக
என்னுள்ளம் இருக்கிறதோ?
அதனால்தான் ஏளனமாக
உன்பார்வை சிரிக்கிறதோ?
*
இதய குளத்தில் நீ வந்து குளித்தாய்
நூறு இன்பம் எப்படி விளிக்க?
கரையில் ஏறி நஞ்சினை தெளித்தாய்
கோடி துன்பம் எப்படி விளிக்க?

எதைஎதையோ படித்தேனே
பெண்ணுள்ளம் படிக்கலையே
பெண்ணுள்ளம் படிக்காத
என்னுள்ளம் வெடிக்கலையே

எது ஒன்று செய்தால் என்னை
பூரணமாய் நம்பிடுவாய்?
என்னை விட்டு விலகிப்போகும்
காரணத்தை சொல்லிடுவாய்!
*
(குறிப்பு:வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா? என்ற பாடல் மெட்டு)

2 கருத்துகள்:

மாய உலகம் சொன்னது…

எதைஎதையோ படித்தேனே
பெண்ணுள்ளம் படிக்கலையே
பெண்ணுள்ளம் படிக்காத
என்னுள்ளம் வெடிக்கலையே//

ஆழக்கடலை விட ஆழம் என்று சொல்கிறார்களே நண்பா..அதை எப்படி படிப்பது... கவிதை கலக்கல் அருமை

M.R சொன்னது…

நல்ல பாடல் வரிகள்

அழகாக எழுதி இருக்கீங்க நண்பரே

அருமை