நகர நெரிசலின் குறுகிய சந்தில்
ஜனத்திரள் ஊடேயான பயணத்தில்
திடுமென ஒரு பொழுதில்
கண் பொத்தி நிறுத்தும் கரங்கள்
யாருடையதாக இருக்கும்?
முகம் பார்த்து முகம் பார்த்து
சலித்துபோன கண்களுக்கு
இழையறாது சரஞ்சரமாய்
நீளும் கற்பனையில்
விதம் விதமாய் தலைகள்!
கண்களற்று போயிருந்தால்
எதை உனக்கான பிம்பமென்று
தீர்மானித்திருக்க முடியும்?
சமயத்தில் கபடம் ஏதுமற்ற
புன்னகைமுகம் காணக்கிடைக்கலாம்!
2 கருத்துகள்:
நினைப்பது ஒன்றாகவும், நிகழ்வது வேறாகவும் நகர்ந்து கொண்டு இருக்கிறது வாழ்க்கை. அக்கரைப் பச்சை நிகழ்வுகள் எல்லா காலங்களிலும் உண்டு. கபடம் ஏதுமற்ற புன்னகை முகம் காணக்கிடைக்கலாம் என்ற நம்பிக்கை நகர்த்திக் கொண்டிருக்கிறது வாழ்க்கையை.
தொடர்ந்து பழகுவோம்
கருத்துரையிடுக