திங்கள், 25 மார்ச், 2013

தன்னையறிதல்


யானை பலம் தும்பிக்கை
மனித பலம் தன்னம்பிக்கை!
கேலி கிண்டல் கண்டு
தன்னம்பிக்கை
தூளாவதா?
நாம் தன்னம்பிக்கை தளராமல்
முயற்சியோடு
பயிற்சி செய்து
முன்னேறிக் காட்ட வேண்டும்!

மரியாதை தரும் பழக்கம்
தமிழருக்கு குல வழக்கம்!
இதற்கு ஏன் சுணக்கம்?
இருகை கூப்பி வைப்போம் வணக்கம்!
நாம் அன்னை தந்தை மட்டுமின்றி
ஆசான் இறைவன் மட்டுமின்றி
மாற்றாரிடமும் கொள்வோம் இணக்கம்!

தனித்தன்மை இல்லா மனிதன்
உலகினிலே யாரும் இல்லை!
உள்ளத்தின் ஒருமைப்பாட்டில்
ஒளிந்துள்ளது வெற்றியின் சாவி!
நாம் தன்திறமை அறிந்து கொண்டால்
தவறுகளை திருத்திக் கொண்டால்
வெற்றி மேல் வெற்றி வரும்!

நொடிப்பொழுதும் வீணாக்காமல்
நேர்மையாக உழைத்துப் பாரு!
உழைத்து பார்க்கும் போது
தலை தானாய் நிமிரும் பாரு!
நாம் சூழலுக்கு ஏற்றாற் போல்
நேர்மறையாய் முடிவெடுத்தால்
தோல்வி தூர ஓடும் பாரு!

நமக்கு எது பிடிக்குமென்று
நமக்குத்தானே நன்றாய் தெரியும்!
பிடித்ததை விடாப்பிடியாய்
பிடித்துக் கொண்டாலே வெற்றி வரும்!
நாம் வெற்றி அடைந்தாலும்
தோல்வி அடைந்தாலும்
சுயமுடிவு எடுத்திட வேண்டும்!


3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

/// பிடித்ததை விடாப்பிடியாய்
பிடித்துக் கொண்டாலே வெற்றி வரும்! ///

மிகவும் பிடித்த வரிகள்....

வாழ்த்துக்கள்...

K.s.s.Rajh சொன்னது…

தன்னம்பிக்கை வரிகள் அருமை

பூந்தளிர் சொன்னது…

தன்னம்பிக்கை கவிதை அருமையா இருக்கு. எனக்கு மிகவும் பிடித்த வரிகள் கீழே.
யானை பலம் தும்பிக்கை
மனித பலம் தன்னம்பிக்கை!
கேலி கிண்டல் கண்டு
தன்னம்பிக்கை தூளாவதா?
நாம் தன்னம்பிக்கை தளராமல்
முயற்சியோடு பயிற்சி செய்து
முன்னேறிக் காட்ட வேண்டும்!