புதன், 13 மார்ச், 2013

வாய்ப்பாடு-19

இப்போது பத்தொன்பதாம் வாய்ப்பாட்டை பார்க்கப் போகிறோம்! ஐயோ… நான் வரலப்பா இந்த விளையாட்டுக்கு என்று நீங்கள் யாரும் ஓட மாட்டீர்கள்! ஏனென்றால் நீங்களெல்லாம் கணிதப்புலிகளாக மாறிவிட்டீர்களென்று எனக்குத் தெரியும்! ஒன்பதாம் வாய்ப்பாட்டை போலவே! ஆனால் மடக்கிய விரலின் எண்ணிக்கையுடன் இடப்பக்கமுள்ள விரல்களைக் கூட்டி அதை பத்தால் பெருக்கி பின் வலது புறம் உள்ள விரல்களைக் கூட்ட வேண்டும்!
1 × 19 = 19{(1+0)×10+9}
2 × 19 = 38{(2+1)×10+8}
3 × 19 = 57{(3+2)×10+7}
4 × 19 = 76{(4+3)×10+6}
5 × 19 = 95{(5+4)×10+5}
6 × 19 = 114{(6+5)×10+4}
7 × 19 = 133{(7+6)×10+3}
8 × 19 = 152{(8+7)×10+2}
9 × 19 = 171{(9+8)×10+1}
10 × 19 = 190{(10+9)×10+0}
11 × 19 = 209{190+19}
12 × 19 = 228{(12+10)×10+8} (கட்டை விரலை மட்டும் பத்தாகக் கொள்ளவும்
13 × 19 = 247{(13+10+1)×10+7}
14 × 19 = 266{(14+10+2)×10+6}
15 × 19 = 285{(15+10+3)×10+5}
16 × 19 = 304{(16+10+4)×10+4}
17 × 19 = 323{(17+10+5)×10+3}
18 × 19 = 342{(18+10+6)×10+2}
19 × 19 = 361{(19+10+7)×10+1}
20 × 19 = 380{(20+10+8)×10+0} அட உங்க கைவிரல்களை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியுது பாத்திங்களா? ஒரு முறை ஒரே ஒரு முறை முயற்சித்துத்தான் பாருங்களேன்! மனப்பாடம் செய்யாமல் பத்தொன்பதாம் வாய்ப்பாட்டை உங்களாலும் மிக எளிதாகக் கூற முடியும்! விரல்களோடு காத்திருங்கள் விரைவில் வருகிறேன்!