ஞாயிறு, 31 மார்ச், 2013

துணிந்துரைத்தல்


வாழ்க்கை ஒரு புல்லாங்குழல்
வாசிக்கத்தான் நேரம் இல்லை!
பணமே வாழ்க்கை என்றால்
ஆடிப்பாட நேரம் ஏது ?
நாம் மனதைக் கட்டுப்படுத்தும்
மந்திரத்தை அறிந்து கொண்டு
மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வோம்!

எவரெஸ்டு சிகரம் கூட
எட்டுகின்ற உயரம் ஆச்சே!
நீயும் நானும் கூட
நிலவுக்கே போய் வரலாம்!
நாம் வெற்றிக் கொடி நட்டு
பேரை நிலை நாட்டி
இன்னும்பல சாதனை செய்வோம்!

தீயோரை காண்பதுவும்
தீயோர் சொல் கேட்பதுவும்
தீமை தானே தரும்!
வேறென்ன நன்மை வரும்?
நாம் கெட்ட நோக்கோடு
தொட்டுப்பேசும் கயவரை
எட்டிமிதிக்க கற்றுக் கொள்வோம்!


முதுகுக்கு பின்னால் நின்று
செய்யும் செயல் ஒன்றே ஒன்று!
அதை நான் சொல்வேன் இன்று!
காது கொடுத்து கேட்டால் நன்று!
நாம் வஞ்சக எண்ணமின்றி
வளர்ந்திட வாழ்த்துச் சொல்லி
தட்டிக்கொடுக்க பழகிக் கொள்வோம்!

நட்புக்கு எல்லை இல்லை
நாடு தாண்டி விரியட்டுமே!
முகநூல் மூலம் கூட
கைகள் குலுக்கலாமே!
நாம் அறிமுகமே இல்லாத
நபர்களோடு பழகும் போது
எச்சரிக்கை அதிகம் கொள்வோம்!

3 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தீயோரை காண்பதுவும்
தீயோர் சொல் கேட்பதுவும்
தீமை தானே தரும்!
வேறென்ன நன்மை வரும்?
நாம் கெட்ட நோக்கோடு
தொட்டுப்பேசும் கயவரை
எட்டிமிதிக்க கற்றுக் கொள்வோம்!//

அருமையான வரிகள், இதை ஒவ்வொரு மனிதனும் தெரிந்து நடக்க வேண்டும் இல்லையா...?!

பூந்தளிர் சொன்னது…

நட்புக்கு எல்லை இல்லை
நாடு தாண்டி விரியட்டுமே!
முகநூல் மூலம் கூட
கைகள் குலுக்கலாமே!
நாம் அறிமுகமே இல்லாத
நபர்களோடு பழகும் போது
எச்சரிக்கை அதிகம் கொள்வோம்!

ஆமாங்க ரொம்ப சரியா சொன்னீங்க.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உணர வேண்டிய வரிகள் பல... அருமை... வாழ்த்துக்கள்...