புதன், 13 மார்ச், 2013

வாய்ப்பாடு-9

இப்போது ஒன்பதாம் வாய்ப்பாட்டை பார்க்கலாம். ஐயோ சாமி ஆளை விடுங்க! என்று யாரும் பயந்து ஓட மாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.சரி சரி! உங்கள் கைகளில் பத்து விரல்கள் இருக்கிறதா என்று பாருங்கள். இடது கை கட்டை விரலில் ஆரம்பித்து ஒவ்வொரு விரலாக மடக்கி வாய்ப்பாடு சொல்ல வேண்டும்.அவ்வளவுதான். மடக்கிய விரலுக்கு வலப்புறம் உள்ளதெல்லாம் ஒன்றுகள். இடப்புறம் உள்ளதெல்லாம் பத்துகள்.இரண்டையும் கூட்டிக் கொள்ளுங்கள்.ஜோராக வாய்ப்பாடு சொல்லுங்கள்!
1 × 9 =  9 (0+9)
2 × 9 = 18 (10+8)
3 × 9 = 27 (20+7)
4 × 9 = 36 (30+6)
5 × 9 = 45 (40+5)
6 × 9 = 54 (50+4)
7 × 9 = 63 (60+3)
8 × 9 = 72 (70+2)
9 × 9 = 81 (80+1)
10 × 9 = 90 (90+0)
11 × 9 = 99 (90+9)
12 × 9 =108 (100+8) (கட்டை விரலை மட்டும் நூறாகக் கொள்ளவும்)
13 × 9 =117 (100+10+7)
14 × 9 =126 (100+20+6)
15 × 9 =135 (100+30+5)
16 × 9 =144 (100+40+4)
17 × 9 =153 (100+50+3)
18 × 9 =162 (100+60+2)
19 × 9 =171 (100+70+1)
20 × 9 =180 (100+80+0) இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கும்.10×9=90 வரை புரிகிறது.அதற்கு மேல்? இந்த ஐடியாவை மனதில் கொள்ளுங்கள்.அதாவது 11×9=90+9, 12×9 லிருந்து கட்டை விரலை நூறாக கொண்டு கணக்கிட்டு பாருங்கள்.எளிமையாக இருக்கும்.விரல் பத்து இருக்கு! மனப்பாடம் எதுக்கு?