புதன், 20 மார்ச், 2013

வாய்ப்பாடு-14

இப்போதான் ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு ஐடியாவை பார்க்க போறோம்! 11லிருந்து 19 வரைக்கும் எந்த இரண்டு எண்களைக் கொடுத்தாலும் மனசிலேயே கணக்கு போட்டு சொல்லும் ஐடியா அது! வேண்டுமானால் விரல்களையும் துணைக்கு வைத்துக் கொள்ளலாம்! இல்லை என்றால் விட்டு விடலாம்! அது உங்கள் இஷ்டம்! 
1.   10×10=100 மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
2.   கடைசி இலக்கங்களைக் கூட்டி உடன் பூஜ்ஜியத்தை சேர்க்க வேண்டும்!
3.   கடைசி இலக்கங்களை மட்டும் பெருக்கி கொள்ள வேண்டும்!
4.   மூன்று விடைகளையும் கூட்ட வேண்டும்! அவ்வளவுதான்!
1×14=14(14×1=14)
2×14=28(14×2=28)
3×14=42(14×3=42)
4×14=56(14×4=56)
5×14=70(14×5=70)
6×14=84(14×6=84)
7×14=98(14×7=98)
8×14=112(14×8=112)
9×14=126(14×9=126)
10×14=140(14×10=140)
11×14=154(100+50+4)
12×14=168(100+60+8)
13×14=182(100+70+12)
14×14=196(100+80+16)
15×14=210(100+90+20)
16×14=224(100+100+24)
17×14=238(100+110+28)
18×14=252(100+120+32)
19×14=266(100+130+36)
   20×14=280(14×20=280)  
சுண்டு விரல்-11, மோதிர விரல்-12, நடுவிரல்-13, ஆள்காட்டி விரல்-14, கட்டை விரல்-15.
10×10=100 மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்
நிற்கும் விரலைக் பத்தாக கூட்டி கொள்ள வேண்டும்.
மீண்டும் நிற்கும் விரலையே பெருக்கிக் கொள்ள வேண்டும்!
           11×14=?
100(மனதில் இருப்பது)+50(நிற்கும் விரல்கள்)+4(நிற்கும் விரல்களின் பெருக்குத்தொகை)=154
சுண்டு விரல்-16, மோதிர விரல்-17, நடுவிரல்-18, ஆள்காட்டி விரல்-19, கட்டை விரல்-20 என்றும் கொள்ளலாம்!
 

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அனைத்தும் தொகுத்து வைத்துள்ளேன்... நன்றி...

தொடர வாழ்த்துக்கள்...

சே. குமார் சொன்னது…

அருமை...
கலக்குறீங்க...
புதுமையான வழியில் சுலபமாக வாய்ப்பாடு...