ஒன்றாம் வாய்ப்பாடு
ஏற்கனவே தெரியும் அல்லவா? நல்லது இப்போது பத்தாம் வாய்ப்பாடு படிக்கலாம் வாருங்கள்.
ஐய்யய்யோ…இரண்டாம் வாய்ப்பாடு, மூன்றாம் வாய்ப்பாடு என்று வரிசையாக படிக்காமல் அதற்குள்
பத்தாம் வாய்ப்பாடா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உங்களுக்கு தேவை இருபது வாய்ப்பாடுகள்!
அவ்வளவுதானே? எப்படி படித்தால் என்ன? சரி வாருங்கள். ஒன்றாம் வாய்ப்பாட்டில் ஒரு பூஜ்ஜியத்தை
சேர்த்தால் பத்தாம் வாய்ப்பாடு! அவ்வளவுதான்!
1 × 10 = 10
2 × 10 = 20
3 × 10 = 30
4 × 10 = 40
5 × 10 = 50
6 × 10 = 60
7 × 10 = 70
8 × 10 = 80
9 × 10 = 90
10 × 10 = 100
11 × 10 = 110
12 × 10 = 120
13 × 10 = 130
14 × 10 = 140
15 × 10 = 150
16 × 10 = 160
17 × 10 = 170
18 × 10 = 180
19 × 10 = 190
20 × 10 = 200
அட இவ்வளவுதானா?என்று ஆச்சரியப்படாதீர்கள்!ஒரு எண்ணை பத்தால் பெருக்க அந்த எண்ணுடன்
ஒரு பூஜ்ஜியத்தை சேர்த்தால் போதும். நூறால் பெருக்க இரண்டு பூஜ்ஜியம், ஆயிரத்தால் பெருக்க
மூன்று பூஜ்ஜியம், பத்தாயிரத்தால் பெருக்க நான்கு பூஜ்ஜியம், லட்சத்தால் பெருக்க ஐந்து
பூஜ்ஜியம், பத்து லட்சத்தால் பெருக்க ஆறு பூஜ்ஜியம், கோடியால் பெருக்க ஏழு பூஜ்ஜியம்.
அவ்வளவுதான்!
1 கருத்து:
குழந்தைகளுக்கா...?
கருத்துரையிடுக