டெங்குவுக்கு மருந்து
உண்டா?
டெங்குவுக்கு என்று
தனியாக மருந்து எதுவுமில்லை.ஆனால் அதைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
டெங்கு யாருக்கு
வரும்?
டெங்கு உள்ள நபரைக்
கடித்த கொசு நம்மை கடித்தால் டெங்கு நமக்கும் வரும்.
டெங்குவின் அறிகுறிகள்
என்ன?
சாதாரண ஜுரத்துடன்
தலைவலி, இடுப்பு வலி, உடல் அசதி குறைந்தது எட்டு நாட்களுக்கு இருக்கும்.பின்னர் தானாகவே
ஜுரம் படிப்படியாக குறைந்து விடும்.நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு உடலில்
சிவப்பு நிற கொப்புளங்கள், கண்களில் கடுமையான வலி, பல் ஈறுகளில் இரத்த கசிவு,சிறுநீர்
மற்றும் மலத்தில் இரத்தம் வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.
டெங்குவை எப்படி
கண்டு பிடிப்பது?
இரத்த பரிசோதனை
நிலையத்தில் NS1, IgG, IgM பரிசோதனை செய்து டெங்கு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள
முடியும்.
டெங்குவை உறுதி
செய்த பின் அடுத்து என்ன செய்வது?
அடுத்து செய்து
கொள்ள வேண்டிய பரிசோதனை platelet count ஆகும். இது ஒருவருக்கு சாதரணமாக 1.5 இலட்சம்
முதல் 4.5 இலட்சம் வரை இரத்தத்தில் இருக்க வேண்டும்.
platelet
count இரத்தத்தில் குறைவாக இருந்தால் என்ன செய்வது?
1.5 இலட்சத்துக்கும்
குறைவாக platelet இருந்தாலும் பயப்படத்தேவை இல்லை. போதுமான ஓய்வு,அதிக அளவு அடிக்கடி
தண்ணீர், பழச்சாறு, இளநீர், நீர் ஆகாரங்கள், சத்தான உணவு, போன்றவற்றை எடுத்துக் கொள்ள
வேண்டும். இதன் மூலம் platelet மீண்டும் அதிகரிக்கும்.
டெங்கு எப்போது
சரியாகும்?
platelet
count தினமும் இருவேளை கவனித்து வர வேண்டும்.40,000 க்கும் குறைவாக செல்லும் போது
platelet தனியாக பிரித்து இரத்தத்தில் செலுத்தும் வசதியுள்ள மருத்துவமனையில் சேருவதைத்தவிர
வேறு வழி இல்லை.வைரஸ் தாக்கம் இருக்கும் வரை எத்தனை முறை platelet தனியாக பிரித்து
இரத்தத்தில் செலுத்தினாலும் platelet குறைந்து கொண்டேதான் இருக்கும்.ஆனால் நாம் தொடர்ந்து
ஊட்டச்சத்தையும். Platelet யும் அளித்துக் கொண்டே இருந்தால் நோயின் தீவிரம் குறைந்து
platelet count கூட ஆரம்பிக்கும்.பின் டெங்கு சரியாகும்.
பப்பாளிச்சாறு,
மலை வேம்பு, நில வேம்பு பயன் தருமா?
நோய் எதிர்ப்பு
சக்தி உள்ளவர்களுக்கு எதுவுமே தேவையில்லை. டெங்கு உறுதியான பின் தொடர்ந்து
platelet count கண்காணிப்பது மட்டுமே சரியான தீர்வாக இருக்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக