திங்கள், 24 டிசம்பர், 2012

சுகாசனம்


செய்முறை :

முதலில் வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். முதுகு நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும். இரண்டு கைகளிலும் கட்டைவிரலையும் ஆட்காட்டி விரலையும் இணைத்து ஒரு வளையம்போல் ஆக்கிக் கொள்ளுங்கள். கைகளைத் தொடையின் மேல் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கட்டைவிரல்கள் அடிவயிற்றை அழுத்தியபடி இருக்க வேண்டும்.

மூச்சை ஆழமாக உள்ளே இழுத்துக் கொள்ளுங்கள். பிறகு மூச்சை மெதுவாக வெளியேற்றியவாறு முன்புறம் குனியுங்கள். முடிந்தவரை குனியுங்கள். (மூக்கு தரையை நோக்கி வர வேண்டும். தரையைத் தொட வேண்டியதில்லை) இடுப்பு கால்களின் மேல் அமர்ந்தபடியே இருக்க வேண்டும்.

இடுப்பைத் தூக்கக் கூடாது. இப்போது மெதுவாக மூச்சை உள்ளிழுத்தபடி நிமிர்ந்து பழைய (அமர்ந்த) நிலைக்கு வர வேண்டும். இதனை ஐந்து முறை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும். அவசரமின்றி பதட்டமின்றி நிதானமாகக் கண்களை மூடியபடி செய்யலாம்.

குனியும் போது மூச்சை வெளியிடுதலும் நிமிரும் போது மூச்சை உள்ளிழுத்தலும் ஒரே சீராக நடைபெற வேண்டும். மூச்சை விட்டு விட்டு இடைநிறுத்துதல் கூடாது.

பயன்கள்:

உடலின் அனைத்து பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் செல்கிறது. ஆஸ்த்துமாவிற்கு மிகவும் சிறந்த ஆசனம் இது.

கருத்துகள் இல்லை: