ஞாயிறு, 23 டிசம்பர், 2012

பத்மாசனம்


செய்முறை :

யோகாசனத்தில் உட்கார்ந்து செய்யும் ஆசனம், நின்று செய்யும் ஆசனம், படுத்து கொண்டு செய்யும் ஆசனம் என மூன்று வகை ஆசனங்கள் உள்ளது. இதில் பத்மாசனம் என்பது உட்கார்ந்து கொண்டு செய்யும் ஆசனமாகும்இதை ஆசனம் என்று சொல்வதை விட, யோகா முத்திரை என்று சொல்லலாம்.

பத்மம்என்றால் தாமரை என்று பொருள். இதை செய்யும் போது தாமரை மலர் போல் தோற்றமளிப்பதால் பத்மாசனம் என அழைக்கப்படுகிறது. கால்களை நீட்டி உட்கார்ந்து, வலது காலை கைகளின் உதவியுடன் தூக்கி இடது தொடையில் அடிவயிற்றை ஒட்டினாற் போல் வைக்கவும். பின்னர் இடது காலை தூக்கி வலது தொடையில் அடிவயிற்றை ஒட்டினாற் போல் வைக்கவும்.

அடிப்பாதங்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும். முழங்கால்கள் தரையில் படக் கூடியதாக, முதுகு எலும்பை நேராக நிமிர்த்திக் கம்பீரமாக உட்கார வேண்டும். இரண்டு கைகளையும் சின் முத்திரையுடன் (ஆள்காட்டி விரல் கட்டை விரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். இதர விரல்கள் தரையை நோக்கியிருக்கும்) வைத்துக்கொண்டு, கண் பார்வையை மூக்கின் நுனியில் செலுத்தவும்.

முதலில் இடது காலை வலது தொடையிலும் வலது காலை இடது தொடையிலும் வைத்தும் உட்காரலாம். தியானம், தவம், மன ஒருமைப்பாடு இவற்றிக்குச் சிறந்தது. நாடி சுத்தி, பிராணாயாமம் இந்நிலையில் இருந்து கொண்டு செய்தல் நலம்

பலன்கள் :

அடிவயிற்று நரம்புகளுக்கு பிரதேசத்துக்கு ரத்த ஒட்டத்தை அதிகரிக்கும். நரம்புகளுக்கு நல்லது. பத்மாசனம் செய்யும் போது குனியக்கூடாது. தொடக்கத்தில் முழங்கால் வலி ஏற்படலாம். பழகப் பழக சரியாகி விடும். ஆனால் வலி வந்தால் ஆசனத்தை நிறுத்தி, இளைப்பாறவும்.


கருத்துகள் இல்லை: