செவ்வாய், 25 டிசம்பர், 2012

பதங்காசனம்


செய்முறை :

முதலில் விரிப்பில் அமரவும். பின்னர் இரு கால்களையும் விரித்து இரு கால் பாதங்களும் ஒன்றாக இருக்கும் படி வைக்கவும்.(படத்தில் உள்ளது போல்). இரண்டு கால் குதிகால்களும் வெளியே முழங்கால் எதிராக உள்ளது போல் இருக்க வேண்டும்.

இரண்டு கைகளாலும் இரு கால் குதிக்கால்களையும் பிடித்துக் கொண்டு தொடைகளை மேலும் கீழுமாக அசைக்க வேண்டும். முதுகு, கழுத்து மற்றும் தலை ஒரு நேராக செங்குத்து கோடு போல் இருக்க வேண்டும்.. இவ்வாறு 20 முதல் 25 வரை செய்ய வேண்டும்.

பயன்கள் :

மூட்டுகளில் நெகிழ்தன்மையை அதிகரிக்கிறது. கால்களுக்கு வலிமை அளிக்கிறது. தொடைகளில் உள்ள தேவையற்ற சதை குறைய இந்த ஆசனம் உதவுகிறது

கருத்துகள் இல்லை: