திங்கள், 24 டிசம்பர், 2012

மண்டூகாசனம்


செய்முறை:

முதலில் விரிப்பில் முழங்கால்களை மடக்கி தொழுகை செய்வது போல் உட்காரவும். அப்படியே முன்புறமாக குனிந்து படுங்கள். அப்போது உங்களின் அடிவயிறு, மேல் வயிறு, மார்பு, மோவாய் ஆகியவை தரையில் படிந்திருக்கட்டும்.

இரண்டு உள்ளங்கைகளும் தரையில் படும்படி முழங்கையை மடக்கி வையுங்கள். இந்தநிலையில் சில நிமிடங்கள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இந்த ஆசனத்தை 3 முதல் 5 முறை செய்யலாம்.

பயன்கள்:

இந்த ஆசனம் செய்வதால் சிறுநீரகம், சிறுகுடல், பெருங்குடல், ஜனன உறுப்புகள் நன்கு இயங்கும். கர்ப்பப்பை கோளாறுகள் அகலும். வயிற்று கோளாறு, பிருஷ்ட தொடைப்பகுதியில் உள்ள அதிகப்படியான சதை குறையும்.


கருத்துகள் இல்லை: