திங்கள், 24 டிசம்பர், 2012

ஜானுசிரசாசனம்


செய்முறை:  

முதலில்  விரிப்பில் அமரவும். வலது காலை மடித்து, இடது தொடை அருகில் படும்படி வைக்கவும். பின்னர்  இடது காலை நேராக நீட்டவும். கைகளை உயர்த்தி இரு கைகளாலும் கொண்டு இடது கால் பாதத்தைத் தொடவும். இடது கால் முட்டியில் நெற்றி படும்படி செய்யவும்முட்டிகள் மடங்கக் கூடாது.  30 விநாடிகள் இதே நிலையில் இருக்கவும். பின் சாதாரண நிலைக்கு வரவும். இதுபோல் காலை மாற்றிச் செய்யவும். இவ்வாறுமுதல்வரை செய்யவும்.

பலன்கள்:

சிறுநீர்க்குழாயில் ஏற்படும் கற்களை கரைக்கும். பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்க உதவும். நீரிழிவு, மாதவிடாய்ப் பிரச்சினைகள் நீங்கும். தொந்தி குறையும். குடல் இறக்கத்தைச் சரி செய்யும்

கருத்துகள் இல்லை: