செவ்வாய், 25 டிசம்பர், 2012

வக்ராசனம்


செய்முறை :
                       
உட்கார்ந்தபடியே செய்யும் இந்த யோகாசனம் வக்ராசனம் என்று அழைக்கப்படுகிறது. முதலில் கால்களை நேராக நீட்டி அமரவும். வலது காலை முட்டி வரை மடக்கவும். பிறகு உள்ளங்காலை இடதுகால் முட்டிக்கு அருகில் இருத்தவும். (மூச்சு விடவும்) உடலின் நடுப்பகுதியை வலது புறமாக திருப்பவும் வலது தோளை மடக்கப்பட்ட வலது காலிற்கு வெளியே கொண்டு வரவும்.

வலது கையை ஆதரவிற்காக முதுகுக்குப்பின்னால் கொண்டு வருக. முதுகெலும்பை நேராக நிமிர்த்தி இடது கையால் வலது கணுக்காலைப் பற்றவும். இடது கால் நீட்டியபடி இருக்கவேண்டும். கணுக்கால்கள் மேல் நோக்கி இருக்கவேண்டும்.

(மூச்சு விடவும்) உடலின் நடுப்பகுதியை அப்படியே வலதுபுறமாக மேலும் திருப்பவும் கழுத்தை திருப்பி உங்களுக்கு பின்புறமாக பார்வையை செலுத்தவும் இதே நிலையில் உங்களால் முடிந்த வரை இருக்கவும். (மூச்சை உள்ளிழுக்கவும்) இப்போது கழுத்து மற்றும் உடலின் நடுப்பகுதிகளை முன்பக்கமாக திருப்பவும். கைகளை விடுவிக்கவும், கால்களை நீட்டவும். தண்டாசன நிலையில் அமரவும்.

பயன்கள்:

முதுகெலும்பை ஒழுங்குபடுத்தும் முதுகுத் தண்டெலும்புகளின் வளைந்து கொடுக்கும் தன்மையை அதிகரிக்கும் சீரணத் தன்மையை அதிகரிக்கும். தோள்களை அகலமாக்கும் கழுதுத் தசைகளுக்க்கு சிறந்த பயிற்சி அளிக்கும். முதுகு, கழுத்து வலி இருக்கும்போது இந்த யோகாசனத்தை செய்ய கூடாது.

கருத்துகள் இல்லை: