திங்கள், 24 டிசம்பர், 2012

மார்ஜரி ஆசனம்


செய்முறை:

விரிப்பில் வடக்கு நோக்கி, வஜ்ராசனத்தில் அமரவும். இரு கைகளையும் தேவையான தூரத்தில் முழங்காலுக்கு இணையாக நிலைநிறுத்துங்கள். விரல்கள் மட்டும் தரையில் உள்ளங்கைகள் பதிய மேல்நோக்கி இருக்க வேண்டும். இடுப்பிலிருந்து தோள் பட்டைவரை உள்ள முதுகு எலும்பை மேல்நோக்கி உடம்பை உயர்த்தவேண்டும்.

ஒவ்வொரு முதுகுதண்டு - எலும்பையும் மனக்கண்ணால் நினைத்து பார்த்து , அத்தனையையும் கீழே இறக்கும் வகையில், தலையை மேல்நோக்கி தூக்கவேண்டும். இவைகளை மேலும் - கீழுமாக மாற்றி மாற்றி, இயல்பான சுவாசத்தில் 20 முறை செய்யவேண்டும். அதற்குப் பிறகு, பழைய நிலைக்கு திரும்பிவிடலாம்.

குறிப்பு: மார்ஜரி ஆசனத்தை பரபரப்போடு செய்யக்கூடாது. அப்படி செய்தால் முதுகுவலி, பிடரி வலி ஆகிய அவதிகள் வந்துசேரும்.

கருத்துகள் இல்லை: