ஞாயிறு, 13 மே, 2012

மா...


மா...
எனக்கு மிக மிக
பிடித்த பழம்!

உண்ணாமல்
நினைத்து பார்த்தாலே
உமிழ்நீர் சுரக்கும் என்பதாலோ

தமிழ் இலக்கியத்தின்
முக்கனிகளுள்
முதற்கனி என்பதாலோ

கடவுளர்களின் உணவென்று
பண்டைய வேதங்களில்
குறிப்புகள் உள்ளதாலோ

உலக அளவில்
பெருமளவில்
விளைவிக்க படுவதாலோ

சர்க்கரை புரதம்
உயிர்ச்சத்துக்கள்
நிறைந்து உள்ளதாலோ

என்று நீங்கள்
நினைத்திருந்தால்
நான் பொறுப்பல்ல!

உச்சரிக்கும் போது
என் அம்மாவை
நினைவு படுத்துவதால்

மா...
எனக்கு மிக மிக
பிடித்த பழம்!

5 கருத்துகள்:

மனசாட்சி™ சொன்னது…

அருமையாக எளிமையாக சொன்னீங்க..மா

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

செய்தாலி சொன்னது…

அருமை மிக மிக அருமை

Rathnavel Natarajan சொன்னது…

அருமை.
வாழ்த்துகள்.

பாலா சொன்னது…

அம்மா மா எனக்கும் மிகப்பிடித்தவை.

சே. குமார் சொன்னது…

அம்...மா...
அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.