வெள்ளி, 6 ஜனவரி, 2012

நான்கெழுத்து கவிதை!

முதல் எழுத்து
ஏழு ஸ்வரத்தில்
முதல் ஸ்வரமாய்
எந்தன் காதில்
நின்று ஒலித்தது!

இரண்டாம் எழுத்து
பொட்டு வைத்து
வளைந்து நிமிர்ந்து
உன்னைப் போல
அழகாய் சிரித்தது!

மூன்றாம் எழுத்து
மழலை பேசும்
கொஞ்சு கிளியின்
சிவந்த அலகில்
மெல்ல உதித்தது!

நான்காம் எழுத்து
கொடுத்து கொடுத்து
சிவந்த கைகள்
மேலும் சிவக்க
யாசகம் கேட்டது!

மொத்தத்தில் நீ
நான்கு வரி
கவிதை படிக்கும்
நான்கெழுத்து கவிதை!

4 கருத்துகள்:

பாலா சொன்னது…

பெயர் அழகாக இருக்கிறது. கவிதையாக மட்டுமல்ல, பாடலாகவும் இருக்கும்.

மனசாட்சி சொன்னது…

கவிதை.... கவிதை....

sangeetha சொன்னது…

அந்த நான்கெழுத்து வார்த்தை? எது என்று உமக்கே தெரியாதா? சொல்லாமல் விட்டு விட்டீர்?

ரசிகன் சொன்னது…

இத விட அழகா ஒரு பேர சொல்ல முடியும்னு நெனக்கிறீங்க! சான்சே இல்ல. கவிதையிலேயே சங்கீதம் பாடிட்டீங்க போங்க.