புதன், 25 மே, 2011

மெட்டுப்பாடல்கள்-5

கண்ணோடு கனவு -கலைந்திடும்
கண்ணோடு கனவு!

காதல் ஒரு கனவு இல்லை
கண்ணை விட்டு அது கலைவதில்லை!
*
காதல் உயிர்களை வாட வைக்கும்
வாடும் உயிர்களை வாழ வைக்கும்!

காதல் என்பது பூங்கிளையே
நானும் அதிலே ஓர் இலையே!

கிளைகளிலே வசந்தம் வந்து வாழாதோ?
*
காதல் உயிர்களை தேட வைக்கும்
தேடும் உயிர்களை பாட வைக்கும்!

காதல் என்பது இன்னிசையே
காலம் பாடும் குயில் இசையே!

காதினிலே குயிலும் வந்து கூவாதோ?
*
(குறிப்பு:பொன் மாலைப்பொழுது இது ஒரு பொன் மாலைப்பொழுது என்ற பாடல் மெட்டு)