புதன், 18 மே, 2011

"அ"வரிசைப்பாட்டு



அலைஅலை அலைஅலை அலைகடலே
ஆமை வசிக்கின்ற அலைகடலே 
இரவும் பகலும் பாராமல் 
ஈகை செய்கின்ற அலைகடலே
உப்பளம் தனிலே உப்பானாய்
ஊருக்கெல்லாம் மழை தந்தாய்
எத்தனை எத்தனை உயிரினங்கள்
ஏராளமான செல்வவளங்கள்
ஐயோ எப்படி சுமக்கின்றாய்
ஒரு தெய்வத்தாயும் நீதானே
ஓலமிட்டு அழுகின்ற உள்மனதை
ஔடதம் தந்து மகிழ்விக்கும் 
அஃது உனது குளிர் காற்று!

கருத்துகள் இல்லை: