அழகே பேரழகே 
உன் அழகு போல் இல்லை வேறழகே!
கண்ணுக்குள்ளே கனவாய் பூத்திடு 
கண்கள் கூட விலையாய் கேட்டிடு!
பேரழகே என் பேரழகே 
பேரழகே என் பேரழகே 
*
வாழ்க்கை இன்று உன்னிடம் அழகே
வாழ்க்கை இன்று உன்னிடம் அழகே
வார்த்தை ஒன்று சொல்லிடு அழகே 
மெல்லிய பூங்காற்று 
உன் பேர் சொல்லி ஆனது தாலாட்டு!
நானும் பேர் சொல்ல வரம் தந்திடு 
வாழ்வை நான் வெல்ல கரம் தந்திடு!
*
காதல் தந்திடும் காயம் அழகே
காதல் தந்திடும் காயம் அழகே
காயம் தந்திடும் கண்ணீர் அழகே 
நினைவில் நீ இருந்தால் 
நெஞ்சோடு ஆயிரம் நீரூற்று!
நாணல் நானாக நதியாகிடு 
கானல் ஆகாமல் எனை சேர்ந்திடு!
*
(குறிப்பு:கண்ணே கலை மானே கன்னி மயிலென கண்டேன் உனை நானே என்ற பாடல் மெட்டு) 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக