புதன், 25 மே, 2011

மெட்டுப்பாடல்கள்-4

நீ முகத்தை திருப்பிக்கொண்டால்
தீ மிதிக்கும் எந்தன் நெஞ்சம்
பூவே நீ அறியாயோ?
புன்னகையும் புரியாயோ?
*
மார்கழி மாதத்திலே
நீயும் இடும் கோலத்திலே
ஓர் பனியின் துளி கூட
சிந்தாமல் குடை விரிப்பேன்!

பாவி எந்தன் நெஞ்சுக்குள்ளே
தாவுகின்ற ஆசைகளை
தேவி உந்தன் காதுக்குள்ளே
ஒவ்வொன்றாய் கடை விரிப்பேன்!
*
பாசிபல படர்ந்திருக்கும்
தாமரைப்பூ குளத்தினிலே
வீசி விட்டு போகும் உந்தன்
முல்லைசரம் சேர்த்து வைப்பேன்!

போதுமான நட்சத்திரம்
என்னிடத்தில் இல்லையென்று
வானம் வந்து கேட்கையிலே
அக்குறையை தீர்த்து வைப்பேன்!
*
(குறிப்பு:வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் என்ற பாடல் மெட்டு)

கருத்துகள் இல்லை: