புதன், 25 மே, 2011

மெட்டுப்பாடல்கள்-2

விதை போல இதயத்தில் விழுந்தாய்
பூங்கொடியே பூங்கொடியே
சதை எங்கும் கிளைகள் பரப்பினாய்
பூங்கொடியே பூங்கொடியே

உன் நெற்றியில் குங்குமம் சரிதான்
உன் புருவத்தில் கண்மையும் சரிதான்
உன் விரல்களில் மருதாணி சரிதான்
உன் உதட்டினில் சாயமும் சரிதான்
ஆனால் யாவும் என்மேல் பூசிப்போனது சரியா?
*
தேவதையே என் தேவதையே
உன் நகங்களை கொண்டு கிழித்து
உன் பற்களை கொண்டு கடித்து
என் உயிரினை அதன்வழி குடித்து 
உன் செல்ல கோபம் வெளிபடுத்து!

உன் கூந்தலில் என்னை சிறை செய் 
அடி நானும் கூடத்தான் இரவு 
உன் வேர்வையில் என்னை கறை செய் 
அடி நானும் கூடத்தான் நிலவு!

நான் கொடுத்து வைத்தவன் 
கொடுத்து வைத்தவன் எடுத்து கொள்ளவா?
சொல் சொல் சொல் 
*
தாமரையே என்  தாமரையே  
சூரியன் எனக்குள்ளே உதிக்கும்
வானவில் வர்ணங்கள் ஜொலிக்கும்
வண்ணத்து பூச்சிகள் பறக்கும்
யாவும் உனைகண்டு நடக்கும்!

ஒரு விழி என்னை அழைத்து 
விருந்தினை உண்ண சொல்லும் 
மறுவிழி அதனை மறுத்து 
மருந்தினை உண்ண சொல்லும்!

நான் விருந்து உண்பதா?
மருந்து உண்பதா? உந்தன் முடிவென்ன?
சொல் சொல் சொல் 
*
(குறிப்பு:உன்னைத்தான் குயிலும் தேடுது குக்குக்கூ...குக்குக்கூ...என்ற பாடல் மெட்டு)

2 கருத்துகள்:

sritech academy சொன்னது…

I feel You will become a good writer. But now you are in a initial stage. Please improve Yourself.

sangeetha சொன்னது…

உன்னைத்தான் குயிலும் தேடுது குக்குக்கூ...குக்குக்கூ...என்ற பாடல் மெட்டு)

இது என்ன படம்?