வியாழன், 20 பிப்ரவரி, 2014

கணக்குப்புதிர்-1

ஓர் நான்கு அடுக்கு மாடிவீட்டிற்கு ஒரு தேங்காய் வியாபாரி வந்தார்.
தன்னிடமுள்ள தேங்காயில் பாதியையும் அதனுடன் அரைத்தேங்காயையும் முதல் வீட்டிற்குக் கொடுக்கிறார்.
மீதி உள்ளதில் பாதி அதனுடன் அரைத்தேங்காயை இரண்டாம் வீட்டிற்குக் கொடுக்கிறார்.
மீதி உள்ளதில் பாதி அதனுடன் அரைத்தேங்காயை மூன்றாம் வீட்டிற்குக் கொடுக்கிறார்.
மீதி உள்ளதில் பாதி அதனுடன் அரைத்தேங்காயை நான்காம் வீட்டிற்குக் கொடுக்கிறார்.
தேங்காய் வியாபாரியின் கூடை காலியாகிவிட்டது!
அப்படியானால் வியாபாரி கொண்டு வந்த தேங்காய்கள் எத்தனை?