உன் கண்ணின் மணியாக
என்னை வைத்தாயே!
உன் நெஞ்சுக் கூட்டோடு
என்னை தைத்தாயே!
நான் உனக்கோர் அடையாளம்
உன்னை காக்கும் கடிவாளம்
உந்தன் தொடுகையிலே
உணர்கிறேன் மின்சாரம்
தினந்தோறும் உன்னால் நான் சிறக்கின்றேனே
இறக்கையொன்றும் இல்லாமல் பறக்கின்றேனே!
*
கண்களை கவர்ந்தே இழுக்கும்
வண்ணங்கள் என்னிடம் உண்டு
மலரும் நான் இல்லை
மொழிந்திடு முடிந்தாலே!
அழகாக வானில் பறப்பேன்
அண்ணாந்து பார்த்திட வைப்பேன்
பறவையும் நான் இல்லை
பகர்ந்திடு முடிந்தாலே!
என்மீது காதல் கொண்டோர்
எனக்காக உயிரும் தந்தோர்
எத்தனை பேரென்று
கணக்கே தெரியவில்லை!
என்பேர் என்பேர் என்னென்று நான் சொல்லவா?
*
இருபத்து நான்குக்கும் எனக்கும்
இருக்குதொரு சம்பந்தம் தானே
கடிகாரம் நான் இல்லை
கண்டுபிடி முடிந்தாலே!
சக்கரம் என்னிடம் உண்டு
செல்லாத ஊரே இல்லை
வாகனம் நான் இல்லை
விடை சொல்லு முடிந்தாலே!
என்னாலே கர்வம் கொண்டோர்
பின்னாலே அணி திரண்டோர்
எத்தனை பேரென்று
எண்ணிட முடியாதே!
என்பேர் என்பேர் என்னென்று நான் சொல்லவா?
*
(குறிப்பு:உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது என்ற பாடல் மெட்டு)
எங்கேயும் எப்போதும் படத்தில் வரும் பாடலில் கடைசி வரை அது என்ன பேர் என்று சொல்லவேயில்லை!(பாட்டில்)
எங்கேயும் எப்போதும் படத்தில் வரும் பாடலில் கடைசி வரை அது என்ன பேர் என்று சொல்லவேயில்லை!(பாட்டில்)
அந்த கடுப்பிலேயே இந்த பாட்டை எழுதினேன்.நானும் சொல்லவேயில்லை!ஆனா நீங்க கண்டு பிடிச்சிடுவீங்கன்னு தெரியும்!
6 கருத்துகள்:
:):)இனிமை
யோசித்துவிட்டு வருகிறேன் நண்பரே ..
வித்தியாசமான சிந்தனை ... வாழ்த்துக்கள்
அருமையாக உள்ளது சகோ..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
நடகமேடையின் கதைக்குப் புறம்பான நகைச்சுவைகள்
தேசியக்கொடி! தலைவா!
எங்கிட்டயேவா!
இளையராஜா அட்ரஸ் தரவா...
அருமை.
கருத்துரையிடுக