ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

மெட்டுப்பாடல்கள்-34

சின்னஞ்சிறு விதையினிலே
அடேங்கப்பா ஆலமரம்
சிறிய உருவமென்றால்
ஏளனமாய் நினைக்கலாமா?
நாம் ஓங்கி வளர்ந்திடவும்
ஓங்காமல் கிடந்திடவும்
உருவமொரு காரணம் இல்லை

வெள்ளை நிற காத்தாடி
உயரத்திலே பறக்கையிலே
கருப்பு நிறம் என்றால்
பறக்காமல் போய் விடுமா?
நாம் மேலே எழுந்திடவும்
கீழே விழுந்திடவும்
நிறமொரு காரணம் இல்லை

காந்தம் போல தனித்தன்மை
எல்லோருக்குள்ளும் உள்ளிருக்கும்
தன்னை அறிந்துகொண்டால்
தனித்தன்மை விளங்கிடாதோ?
காந்தம் இரண்டாய் போனாலும்
துண்டாய் போனாலும்
தனித்தன்மை மாறுவதில்லை

தூங்கவிடா கனவு ஒன்று
வரும் வரைக்கும் தூங்காதிரு
கனவு தினம் கண்டால்
நனவாவது நிச்சயம் அன்றோ?
விழிகள் ஏக்கம் கொண்டாலும்
தூக்கம் கொண்டாலும்
சிவக்காமல் விடிவு இல்லை

உறுதியான எண்ணம் கொண்டு
உண்மையாக பாடுபடு
மனித மனம் நினைத்தால்
அடைந்தே தீரும் அன்றோ?
நாம் கடமைக்கு செய்தாலும்
கடமையாக செய்தாலும்
உழைப்பின்றி வெற்றி இல்லை

(சொய் சொய் பாடல் மெட்டு)









1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அதே பாடலைப் போல பாடிப் பார்த்தேன்... அருமை... பாராட்டுக்கள்...

அதை விட பாட்டின் கருத்துக்கள் மிகவும் அருமை... வாழ்த்துக்கள்...