வியாழன், 19 செப்டம்பர், 2013

மாமா உகெகா அகோபச என்றால் என்ன?

ஆசிரியர்:மாமா உகெகா அகோபச
என்றால் என்ன தெரியுமா?
மாணவர்கள்:மாறி மாறிலி உறுப்பு
கெழு காரணி அடுக்கு
ஆசிரியர்:அப்புறம்?
மாணவர்கள்:கோவை படி சமன்பாடு
முதல் எழுத்தை பாருங்கய்யா!
ஆ:மாறிக்கு உதாரணம் தெரியுமா?
மா:a,b,c,d,x,y,z…
ஆ:மாறிலிக்கு உதாரணம் தெரியுமா?
மா:1,2,3,4…
ஆ:உறுப்புக்கு உதாரணம் தெரியுமா?
மா:a என்பது ஓர் உறுப்பு
a+b ஈருறுப்பு
a+b+c என்பது மூவுறுப்பு கொண்டது.
a+b+c+d என்பது பல்லுறுப்பு கொண்டது
ஆ:கெழுவுக்கு உதாரணம் தெரியுமா?
மா: 3x இன் கெழு 3
x இன் கெழு 1
1/2x இன் கெழு 1/2
-x இன் கெழு -1
ஆ:காரணிக்கு உதாரணம் தெரியுமா?
மா:2x என்பதில் 2ம் xம் காரணிகள்
ஆனால் அது ஓர் உறுப்பு!
5ab என்பதிலே 5 மற்றும் a மற்றும் b என்று
மூன்று காரணிகள் உள்ளன!
ஆனால் அது ஓர் உறுப்பு!
ஆ:அடுக்குக்கு உதாரணம் தெரியுமா?
மா:x இன் அடுக்கு 1
x2 இன் அடுக்கு 2
ஆ:கோவைக்கு உதாரணம் தெரியுமா?
மா:a என்பது ஓர் உறுப்பு கோவை
a+b ஈருறுப்பு கோவை
a+b+c என்பது மூவுறுப்பு கோவை.
a+b+c+d என்பது பல்லுறுப்பு கோவை
ஆ:படிக்கு உதாரணம் தெரியுமா?
மா:x3+x2+x+1 என்ற கோவையிலே
3 என்ற உயர்ந்த அடுக்கே
கோவையின் படி எனப்படும்!
ஆ:சமன்பாட்டுக்கு உதாரணம் தெரியுமா?
மா:சமக்குறியால் கோவைகளை
இணைத்தால் கிடைக்கும் சமன்பாடு!
x+y=25
ஆ:அருமை அருமை மாணவர்களே!