லேபிள்கள்
- ஆசனம் (23)
- எழுதிப்படிப்போம் (48)
- கட்டுரை (7)
- கணக்கு (33)
- கவிதை (17)
- குழந்தைப்பாடல் (26)
- குறுஞ்செய்திகள் (260)
- குறும்படம் (6)
- குறுவட்டு (1)
- சதுரங்கம் (3)
- சிறுகதை (2)
- புகைப்படங்கள் (10)
- புதிர்கள் (1)
- மெட்டுப்பாடல்கள் (38)
- Audio Materials (86)
- MY SCHOOL (2)
- Spoken English (19)
ஞாயிறு, 29 செப்டம்பர், 2013
சனி, 28 செப்டம்பர், 2013
வெள்ளி, 27 செப்டம்பர், 2013
வியாழன், 26 செப்டம்பர், 2013
புதன், 25 செப்டம்பர், 2013
செவ்வாய், 24 செப்டம்பர், 2013
திங்கள், 23 செப்டம்பர், 2013
ஞாயிறு, 22 செப்டம்பர், 2013
வியாழன், 19 செப்டம்பர், 2013
மாமா உகெகா அகோபச என்றால் என்ன?
ஆசிரியர்:மாமா உகெகா அகோபச
என்றால் என்ன தெரியுமா?
மாணவர்கள்:மாறி மாறிலி உறுப்பு
கெழு காரணி அடுக்கு
ஆசிரியர்:அப்புறம்?
மாணவர்கள்:கோவை படி சமன்பாடு
முதல் எழுத்தை பாருங்கய்யா!
ஆ:மாறிக்கு உதாரணம் தெரியுமா?
மா:a,b,c,d,x,y,z…
ஆ:மாறிலிக்கு உதாரணம் தெரியுமா?
மா:1,2,3,4…
ஆ:உறுப்புக்கு உதாரணம் தெரியுமா?
மா:a என்பது ஓர் உறுப்பு
a+b ஈருறுப்பு
a+b+c என்பது மூவுறுப்பு கொண்டது.
a+b+c+d என்பது பல்லுறுப்பு கொண்டது
ஆ:கெழுவுக்கு உதாரணம் தெரியுமா?
மா: 3x இன் கெழு 3
x இன் கெழு 1
1/2x இன் கெழு 1/2
-x இன் கெழு -1
ஆ:காரணிக்கு உதாரணம் தெரியுமா?
மா:2x என்பதில் 2ம் xம் காரணிகள்
ஆனால் அது ஓர் உறுப்பு!
5ab என்பதிலே 5 மற்றும் a மற்றும் b என்று
மூன்று காரணிகள் உள்ளன!
ஆனால் அது ஓர் உறுப்பு!
ஆ:அடுக்குக்கு உதாரணம் தெரியுமா?
மா:x இன் அடுக்கு 1
x2 இன் அடுக்கு 2
ஆ:கோவைக்கு உதாரணம் தெரியுமா?
மா:a என்பது ஓர் உறுப்பு கோவை
a+b ஈருறுப்பு கோவை
a+b+c என்பது மூவுறுப்பு கோவை.
a+b+c+d என்பது பல்லுறுப்பு கோவை
ஆ:படிக்கு உதாரணம் தெரியுமா?
மா:x3+x2+x+1 என்ற கோவையிலே
3 என்ற உயர்ந்த அடுக்கே
கோவையின் படி எனப்படும்!
ஆ:சமன்பாட்டுக்கு உதாரணம் தெரியுமா?
மா:சமக்குறியால் கோவைகளை
இணைத்தால் கிடைக்கும் சமன்பாடு!
x+y=25
ஆ:அருமை அருமை மாணவர்களே!
லேபிள்கள்:
கணக்கு
புதன், 18 செப்டம்பர், 2013
மாமா உகெகா அகோபச என்றால் என்ன?
மாமா உகெகா அகோபச என்றால் என்ன?
இந்த கேள்விக்கு பதில் சொல்லி விட்டீர்கள் என்றால் நீங்கள் கணிதப்புலி!
வேண்டுமானால் ஒரு க்ளு தருகிறேன். இந்த வார்த்தைக்கும் இயற்கணிதத்திற்கும் தொடர்பு இருக்கிறது.
அடக்கடவுளே! டையோஃபாண்டஸ் மற்றும் முகம்மது இப்னு மூசா அல்-குவாரிஸ்மி ஆகியோருக்கும் இயற்கணிதத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்று சொன்னால் கூட பரவாயில்லை!இது என்ன சம்மந்தமே இல்லாமல் மாமா உகெகா அகோபச?
சற்று பொறுங்கள்!
இந்த இரண்டு பேரைப் பற்றிக் கொஞ்சம் பார்த்து விடுவோம்!
அதற்குப் பிறகு மாமா உகெகா அகோபச!
என்ன ஒ.கே.வா?
டயோஃபாண்டஸ்
.
(ஏறத்தாழ கி.மு3ஆம் நூற்றாண்டு)
அலெக்ஸாண்டிரியாவில் வாழ்ந்த கிரேக்கக் கணித மேதை.
இவர் இயற் கணிதத்தின் தந்தை என்று அழைக்கப் படுகிறார்.
xn +yn=znஎன்னும் சமன்பாடு டயோஃபாண்டைன் சமன்பாடு என்றழைக்கப் படுகிறது.
இதில் n > 2 எனும் பொழுது x, y, z- களின் மிகை அடுக்கு மதிப்புகட்குத் தீர்வுகள் ஏதுமில்லை.
அல்-க்வாரிஸ்மி
(கி.பி.:780-850)
“Kitab al-jabr-wa-l-mugabala” என்ற புத்தகத்தை எழுதிய அரபுக் கணித மேதை.
இது இந்திய இயற்கணிதத்தையும் கிரேக்க வடிவியலையும் இணைத்து உருவாக்கப்பட்டது.
இது கணிதத்தின் வளர்ச்சியில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
சரி இப்போது மாமா உகெகா அகோபச! பார்க்கலாமா?
இல்லை!இல்லை!
அதற்கு முன் ஒரு விளையாட்டு!
இது பொம்மைக் கடை விளையாட்டு!
உங்களிடம் நான் 2பேனா,4நோட்டு,5புத்தகம்,6நோட்டு,5பேனா,5புத்தகம்,3பேனா தருவதாக வைத்துக் கொள்வோம்!
எங்கே மொத்தமாக கூட்டி சொல்லுங்கள் பார்க்கலாம்?
10பேனா,10நோட்டு,10புத்தகம்!
ஆம் இதைத்தான் உங்களிடம் எதிர்பார்த்தேன்!
பேனாவையும் பேனாவையும்தான் கூட்ட வேண்டும்
நோட்டையும் நோட்டையும்தான் கூட்ட வேண்டும்
புத்தகத்தையும் புத்தகத்தையும்தான் கூட்ட வேண்டும்!
அது போல, இயற்கணிதத்தில், xஐயும் xஐயும்தான் கூட்ட வேண்டும்.
yஐயும் yஐயும்தான் கூட்ட வேண்டும்
zஐயும் zஐயும்தான் கூட்ட வேண்டும்!
சரி,சரி நாம்,
மாமா உகெகா அகோபச என்றால் என்ன?என்று பார்ப்போமா?
மாறி
மாறிலி
உறுப்பு
கெழு
கெழு
காரணி
அடுக்கு
கோவை
படி
சமன்பாடு
ஆகியவற்றின் முதல் எழுத்துத்துதான் மாமா உகெகா அகோபச!
சரி சரி டென்ஷன் ஆகாதீர்கள் ஒவ்வொன்றாய் பார்ப்போமா?
லேபிள்கள்:
கணக்கு
செவ்வாய், 17 செப்டம்பர், 2013
திங்கள், 16 செப்டம்பர், 2013
வாய்ப்பாடு-குறுவட்டு
மாணவர்களுக்கு பயன்படும் இக்கணித வாய்ப்பாட்டுக்கான குறுவட்டினை அனைவருக்கும் இலவசமாகத் தரவே விரும்புகிறேன்.எனவே தேவைப்படுவோர்க்கெல்லாம் இதனை பயன்படுத்திப் பார்த்தவர்கள் இலவசமாக படி எடுத்து தரும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,சீனுவாசன்
UserName: mohan
PassWord: seenu
http://www.mediafire.com/download/5ra80ejku2ozsye/Maths_Table.exe
அன்புடன்,சீனுவாசன்
UserName: mohan
PassWord: seenu
http://www.mediafire.com/download/5ra80ejku2ozsye/Maths_Table.exe
லேபிள்கள்:
குறுவட்டு
திங்கள், 2 செப்டம்பர், 2013
வாய்ப்பாடு
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=zidhkL2rbBkhttp://www.youtube.com/watch?feature=player_detailpage&v=zidhkL2rbBk வாய்ப்பாட்டினை எளிமையாக படிக்க மேலே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
லேபிள்கள்:
கணக்கு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)