வகுபடுந்தன்மை
1ஆல் வகுபடுந்தன்மை:
எந்த எண்ணாக இருந்தாலும்
அது 1ஆல் வகுபடும்.
2ஆல் வகுபடுந்தன்மை:
ஓர் எண்ணின் கடைசி
இலக்கம் 0,2,4,6,8 என்ற இரட்டைப் படை எண்ணாக இருந்தால், அது 2ஆல் வகுபடும்.
3ஆல் வகுபடுந்தன்மை:
ஓர் எண்ணின் இலக்கங்களின்
கூடுதல் 3இன் மடங்காக இருக்கும் எனில்,அந்த எண் 3ஆல் வகுபடும்.
4ஆல் வகுபடுந்தன்மை:
ஓர் எண்ணின் கடைசி
இரண்டு இலக்கங்கள் 4இன் மடங்காக இருக்கும் எனில்,அந்த எண் 4ஆல் வகுபடும்.
5ஆல் வகுபடுந்தன்மை:
ஓர் எண்ணின் கடைசி
இலக்கம் 0 அல்லது 5ஆக இருப்பின் அது 5ஆல் வகுபடும்.
6ஆல் வகுபடுந்தன்மை:
ஓர் எண் 2 மற்றும் 3 ஆல் வகுபடும் எனில் அது 6ஆல் வகுபடும்.
7ஆல் வகுபடுந்தன்மை:
ஓர் எண்ணின் முதல்
இலக்கத்தை மூன்றால் பெருக்கி அடுத்துள்ள இலக்கத்தோடு கூட்டி வரும் விடை 7இன் மடங்காக
இருப்பின் அந்த எண் 7ஆல் வகுபடும்.
8ஆல் வகுபடுந்தன்மை:
ஓர் எண்ணின் கடைசி
மூன்று இலக்கங்கள் 8இன் மடங்காக இருக்கும் எனில், அந்த எண் 8ஆல் வகுபடும்.
9ஆல் வகுபடுந்தன்மை:
ஓர் எண்ணின் இலக்கங்களின்
கூடுதல் 9இன் மடங்காக இருக்கும் எனில், அந்த எண் 9ஆல் வகுபடும்.
10ஆல் வகுபடுந்தன்மை:
ஓர் எண்ணின் கடைசி
இலக்கம் 0ஆக இருப்பின் அது 10ஆல் வகுபடும்.
11ஆல் வகுபடுந்தன்மை:
ஓர் எண்ணின் ஒற்றை
இட இலக்கங்களின் கூடுதலுக்கும், இரட்டை இட இலக்கங்களின் கூடுதலுக்கும் உள்ள வித்தியாசம்
0 ஆகவோ அல்லது 11இன் மடங்காகவோ இருந்தால் அந்த எண் 11ஆல் வகுபடும்.
12ஆல் வகுபடுந்தன்மை:
ஓர் எண் 3 மற்றும் 4 ஆல் வகுபடும் எனில் அது 12ஆல் வகுபடும்.
1 கருத்து:
குழந்தைகளுக்கும் உதவும் நல்லதொரு தொகுப்பு...
இதை அவர்கள் புரிந்து கொண்டால்... புரிய வைக்க வேண்டும்... நன்றி...
கருத்துரையிடுக