http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=UokCXKcxo9k எண்களின் வகைகளைப் பற்றியும்,அவைகளைக் குறிக்கும் எழுத்துக்களைப் பற்றியும் அறிந்து கொள்வதற்கு மேலே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
லேபிள்கள்
- ஆசனம் (23)
 - எழுதிப்படிப்போம் (48)
 - கட்டுரை (7)
 - கணக்கு (33)
 - கவிதை (17)
 - குழந்தைப்பாடல் (26)
 - குறுஞ்செய்திகள் (260)
 - குறும்படம் (6)
 - குறுவட்டு (1)
 - சதுரங்கம் (3)
 - சிறுகதை (2)
 - புகைப்படங்கள் (10)
 - புதிர்கள் (1)
 - மெட்டுப்பாடல்கள் (38)
 - Audio Materials (86)
 - MY SCHOOL (2)
 - Spoken English (19)
 
வெள்ளி, 21 ஜூன், 2013
ஞாயிறு, 9 ஜூன், 2013
கனமூலம்
http://www.youtube.com/watch?v=Hx6bMR8IT-U  கனமூலம் 1 முதல் 100 வரை விடையாக வரும் எண்களுக்கு (அதாவது முழு கன எண்களுக்கு) எளிமையான முறையில் விடை கண்டுபிடிக்க மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
லேபிள்கள்:
கணக்கு
வியாழன், 6 ஜூன், 2013
வகுபடுந்தன்மை
வகுபடுந்தன்மை
1ஆல் வகுபடுந்தன்மை:
எந்த எண்ணாக இருந்தாலும்
அது 1ஆல் வகுபடும்.
2ஆல் வகுபடுந்தன்மை:
ஓர் எண்ணின் கடைசி
இலக்கம் 0,2,4,6,8 என்ற இரட்டைப் படை எண்ணாக இருந்தால், அது 2ஆல் வகுபடும்.
3ஆல் வகுபடுந்தன்மை:
ஓர் எண்ணின் இலக்கங்களின்
கூடுதல் 3இன் மடங்காக இருக்கும் எனில்,அந்த எண் 3ஆல் வகுபடும்.
4ஆல் வகுபடுந்தன்மை:
ஓர் எண்ணின் கடைசி
இரண்டு இலக்கங்கள் 4இன் மடங்காக இருக்கும் எனில்,அந்த எண் 4ஆல் வகுபடும்.
5ஆல் வகுபடுந்தன்மை:
ஓர் எண்ணின் கடைசி
இலக்கம் 0 அல்லது 5ஆக இருப்பின் அது 5ஆல் வகுபடும்.
6ஆல் வகுபடுந்தன்மை:
ஓர் எண் 2 மற்றும் 3 ஆல் வகுபடும் எனில் அது 6ஆல் வகுபடும்.
7ஆல் வகுபடுந்தன்மை:
ஓர் எண்ணின் முதல்
இலக்கத்தை மூன்றால் பெருக்கி அடுத்துள்ள இலக்கத்தோடு கூட்டி வரும் விடை 7இன் மடங்காக
இருப்பின் அந்த எண் 7ஆல் வகுபடும்.
8ஆல் வகுபடுந்தன்மை:
ஓர் எண்ணின் கடைசி
மூன்று இலக்கங்கள் 8இன் மடங்காக இருக்கும் எனில், அந்த எண் 8ஆல் வகுபடும்.
9ஆல் வகுபடுந்தன்மை:
ஓர் எண்ணின் இலக்கங்களின்
கூடுதல் 9இன் மடங்காக இருக்கும் எனில், அந்த எண் 9ஆல் வகுபடும்.
10ஆல் வகுபடுந்தன்மை:
ஓர் எண்ணின் கடைசி
இலக்கம் 0ஆக இருப்பின் அது 10ஆல் வகுபடும்.
11ஆல் வகுபடுந்தன்மை:
ஓர் எண்ணின் ஒற்றை
இட இலக்கங்களின் கூடுதலுக்கும், இரட்டை இட இலக்கங்களின் கூடுதலுக்கும் உள்ள வித்தியாசம்
0 ஆகவோ அல்லது 11இன் மடங்காகவோ இருந்தால் அந்த எண் 11ஆல் வகுபடும்.
12ஆல் வகுபடுந்தன்மை:
ஓர் எண் 3 மற்றும் 4 ஆல் வகுபடும் எனில் அது 12ஆல் வகுபடும்.
லேபிள்கள்:
கணக்கு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)