புதன், 21 நவம்பர், 2012

ஓம்கார ப்ராணாயாமம்


பத்மாசனம் அல்லது  சித்தாசனத்தில் அமரவும்.
கைகளில் ஞானமுத்திரை இருக்கட்டும்.
நுரையீரல் நிரம்பும் வரை காற்றை உள் நோக்கி சுவாசிக்கவும்.
இரு புருவங்களுக்கு இடையில் மனதை நிறுத்தவும்.
ஓம்என்ற ஓசையுடன் காற்றை வெளியிடவும்.
மூன்று முறை செய்யவும்.
பிறகு தியானத்தில் முழு சிந்தனையுடன் சுவாசத்தை கவனிக்கவும்.
இரண்டு நிமிடங்களுக்கு பின் கைகளை மேலே உயர்த்தி இரு உள்ளங்கைகளையும் உரசி கண்களின் மேல் வைத்து கண்களை திறக்கவும்.
பலன்: உங்களை நீங்கள் அறிந்து கொள்ள உதவி செய்கிறது.

செவ்வாய், 20 நவம்பர், 2012

ப்ராமரீ ப்ராணாயாமம்


பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில் அமரவும்.
நுரையீரல் நிரம்பும் வரை காற்றை உள்நோக்கி சுவாசிக்கவும்.
இரு காதுகளையும் இரு கைகளின் கட்டை விரல்களால் மூடவும்.
நடுவிரல் மற்றும் மோதிர விரல்களால் இரு கண்களையும் மூடவும்.ஆட்காட்டி விரல்களால் முன்னெற்றியை மெதுவாக அழுத்தவும்.
இரு புருவங்களுக்கு இடையில் மனதை நிறுத்தவும்.
“ம்என்ற ரீங்கார ஓசையுடன் மனதில் ஓம் என்று நினைத்தபடி காற்றை வெளியிடவும்.
மூன்று முதல் இருபத்தியோரு முறை செய்யவும்.
பலன்கள்:
மனம் ஒரு நிலைப்படும்.
மன அழுத்தம் குறையும்.
உயர் இரத்த அழுத்தம்,இதய நோய்கள் சரி செய்ய உதவியாக இருக்கும்.

அனுலோம-விலோம ப்ராணாயாமம்


பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில் அமரவும்.
கைகளில் வாயு முத்திரை இருக்கட்டும்.
வலது கை கட்டை விரலால் வலது நாசியை மூடியவாறு இடது நாசி வழியாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.
பின்பு இடது நாசியை வலது கை மோதிர விரலால் அடைத்து வலது நாசி வழியாக மூச்சை வெளியிட வேண்டும்.
மூச்சை வெளியிட்ட வலது நாசி வழியாக மீண்டும் மூச்சை உள்ளிழுத்து வலது நாசியை அடைத்து இடது நாசி வழியாக வெளியிட வேண்டும்.
ஐந்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.
சோர்வு ஏற்படும் தருணத்தில் இடையே சிறிது ஓய்வு எடுத்து கொள்ளலாம்.
பலன்கள்:
இப்பயிற்சியால் உடலின் கணக்கற்ற நாடிகள் தூய்மை அடைவதால் உடலானது ஆரோக்கியம்,பொலிவு மற்றும் வலிமை பெறுகிறது.
மூலாதாரம் எழுப்பப்படுகிறது.
சிறுநீரக வியாதிகள் குணமடையும்.

உஜ்ஜயி ப்ராணாயாமம்


பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில் அமரவும்.
கைகளில் ஞான முத்திரை இருக்கட்டும்.
மூலபந்தம்.ஒட்டியான பந்தம் செய்யும் போது சுவாசத்தை நேரடியாக மூக்கினால் இழுக்காமல் நாம் ஆச்சரியப்படும் போது தொண்டை சதைகளை சுருக்கி ஏற்படுத்தும் ஒலியோடு சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
பின்னர் மூச்சை உள்ளிருத்தியவாறு ஜாலந்தர பந்தம் செய்யவும்.
மேற்கூறிய நிலையில் முடிந்த வரை இருந்து ஜாலந்தர பந்தம் மட்டும் விடுவித்து வலது நாசியை மூடி இடது நாசி வழியாக சுவாசத்தை வெளியேற்றும் போது மற்ற இரண்டு பந்தங்களையும் மெதுவாக விடுவிக்கவும்.
மூன்று முதல் நான்கு முறை செய்யவும்.
பலன்கள்:
தொண்டை வியாதிகள்,தைராய்டு சரி செய்யப்படும்.
குரல் வளம் பெருகும்.
செய்ய கூடாதவர்கள்:
கர்ப்பிணி தாய்மார்கள்,பெண்கள் மாதவிலக்கு நேரங்களிலும்,இதய நோய் உள்ளவர்களும் செய்ய கூடாது.

பாக்ய ப்ராணாயாமம்


ஆசன வாயை சுருக்கி உள்ளிழுத்து அடக்கி வைப்பது ‘மூலபந்தம்ஆகும்.
நெஞ்சு பகுதியை விரித்து வயிற்று பகுதியை நன்றாக உள்ளிழுத்து அடக்கி வைப்பது ஒட்டியான பந்தம்ஆகும்.
உங்கள் தாடையை உங்கள் தொண்டை குழியை தொடுமாறு முன்னோக்கி குனிந்து கொள்வது ஜாலந்தர பந்தமாகும்.
பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில் அமரவும்.
கைகளில் ஞானமுத்திரை இருக்கட்டும்.
இயன்ற அளவு சுவாசத்தை உள்ளிழுத்து வெளியேற்றவும்.
மூலபந்தம்,ஒட்டியான பந்தம் மற்றும் ஜாலந்தர பந்தம் செய்யும் போது சுவாசத்தை வெளியேற்றவும்.
மேற்கூறிய நிலையில் முடிந்தவரை இருந்து பின் சுவாசிக்க விரும்பும் போது மூன்று பந்தங்களையும் மெதுவாக விடுவிக்கவும்.
மூன்று முதல் நான்கு முறை செய்யவும்.
பலன்கள்:
செவிட்டுத்தன்மை,ஊமை,மலச்சிக்கல் சரி செய்யப்படும்.குண்டலினி சக்தி விழிப்படையும்.குடல் புழுக்கள் அழியும்.
செய்ய கூடாதவர்கள்:
கர்ப்பிணி தாய்மார்கள்,பெண்கள் மாதவிலக்கு நேரங்களிலும்,இதய நோய் உள்ளவர்களும் செய்ய கூடாது.