வியாழன், 29 மார்ச், 2012

அம்மா-1


அம்மா...
ஒரு நாளும் அனைவருக்கும் முன்பாக
சாப்பிட்டதே இல்லை நீ!
பல நாட்கள் பரிமாறிய சந்தோஷத்திலேயே
பட்டினியாய் படுப்பாய்!

எழுந்து நின்று உணவு தயாரிக்கும் நிலையில்
உடல்நிலை இல்லாத போதும்
ரொட்டிக்கான மாவை பிசையத் தொடங்கியிருக்கும்
உனது பத்து விரல்கள்!

எது எப்படியோ
வேறுவழியில்லை அம்மா!
நீதான் இன்று முதலில்
சாப்பிட்டாக வேண்டும்!

அடுத்தவருக்கான உணவைத் தயாரித்து
உண்ண வைத்து பார்த்து
உன் பசி போக்கிக்கொள்வதே
வாடிக்கை உனக்கு!

ஆனால் இன்று நீ சாப்பிடாமல்
விரதம் முடிவுக்கு வராது!             
காக்கையாகி தென்னை மரத்தில்
மௌனமாய் அமர்ந்திருக்கிறாய்!

5 கருத்துகள்:

அரசன் சே சொன்னது…

உணர்வுகளை பிழிகின்ற வரிகள் ..
இருக்கும் தவிக்கவைத்து
பிறகு ஏங்குவது ,,

இங்கு சர்வ சாதாரணமாய் நடப்பதை
இயல்பாய் கூறிய உங்களுக்கு என் நன்றிகள்

பாலா சொன்னது…

ஒரு மாத இடைவெளிக்கு பிறகு கம்பேக் கவிதை மிக அருமை.

பாலா சொன்னது…

ஒரு மாத இடைவெளிக்கு பிறகு கம்பேக் கவிதை மிக அருமை.

sathish krish சொன்னது…

கவிதை அருமை

செய்தாலி சொன்னது…

கண்கள்
குளமாகி விட்டது தோழரே