செவ்வாய், 6 ஜூன், 2017

அரசுப்பள்ளி...


பல்லவி
அன்னா ஆவன்னா சொல்லிக் கொடுத்தது அரசுப் பள்ளிதான்
எங்கள் அணு விஞ்ஞானி அப்துல் கலாமும் அரசுப் பள்ளிதான்
அன்னா ஆவன்னா சொல்லிக் கொடுத்தது அரசுப் பள்ளிதான்
எங்கள் அணு விஞ்ஞானி அப்துல் கலாமும் அரசுப் பள்ளிதான்
உணவைத் தந்ததும் இப்பள்ளிதான்
உடையைத் தந்ததும் இப்பள்ளிதான்
உணவைத் தந்ததும் இப்பள்ளிதான்
உடையைத் தந்ததும் இப்பள்ளிதான்
குப்பனும் சுப்பனும் படித்து வளர்ந்தது அரசுப் பள்ளிதான்
அட சாதியும் பேதமும் இல்லாத ஓரிடம் அரசுப் பள்ளிதான்
குப்பனும் சுப்பனும் படித்து வளர்ந்தது அரசுப் பள்ளிதான்
அட சாதியும் பேதமும் இல்லாத ஓரிடம் அரசுப் பள்ளிதான்
சரணம்-1
கையிலே காசில்லா
ஏழைங்க யாரும்
படிப்பதெப்படி சொல்லுங்க நீங்க
அரசுப்பள்ளி வாசலையே மிதித்துவிட்டால் போதும்
அத்தனையும் இலவசம்தான் வாங்க
கட்டணக் கொள்ளை
 மனப்பாடத் தொல்லை
 தனியார்ப் பள்ளியில்
நிறைஞ்சிருக்கு
அரசுப் பள்ளி
 இருப்பதால் தானே
அனைவருக்கும் கல்வி
கிடைச்சிருக்கு
அட பள்ளிக்கூடம் வரமாச்சு படிப்பெல்லாம் உரமாச்சு
அரசுப்பள்ளி யாலே மாணவர்
வாழ்க்கை தரமாச்சு
அட அரசுப்பள்ளி யாலே மாணவர் வாழ்க்கை தரமாச்சு!
சரணம்-2
ஏகப்பட்ட தன்னலமற்ற
நாட்டுப்பற்று இளைஞர்கள்
அரசுப்பள்ளி கொடுத்தது உண்மை
அரசுப்பள்ளி இருந்ததால்தான்
அடுப்படியைத் தாண்டி
புத்தகத்தை ஏந்தியது பெண்மை
இரவு பகல் உழைத்து
 காசு பணம் சேர்த்து
 தனியாரில் சேர்ப்பது
நட்டமுங்க
வாழ்க்கைக்கு இங்கே
 தன்னம்பிக்கை வேணும்
 அரசுப் பள்ளியே
கொடுக்குமுங்க
கல்வி நமது உரிமையாகும்
 கேட்டுப் பெறுவது கடமையாகும்
தனியார் பள்ளியில்
தண்டம் அழுவது
 நமது மடமையாகும்
அட தனியார் பள்ளியில்
தண்டம் அழுவது
 நமது மடமையாகும்!
-கு.சீனுவாசன் ப.ஆ

இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான்...பாடல் மெட்டு

2 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

பாடிக்களித்தேன்
அற்புதமாக கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

ராஜி சொன்னது…

ஆக்கப்பூர்வமான கவிதை