புதன், 23 ஜூலை, 2014

322ஆலகோ மந்திரம் தெரியுமா?

ஒரு எட்டு இலக்க எண்ணைக் கொடுத்து அதன் எண்பெயர் கேட்டால் மீத்திறன் மிக்க மாணவர்களைத்தவிர்த்து மீதி அனைவரும் அந்த எண்ணின் பெயரை சட்டென்று வாசிப்பதற்கு தடுமாறுபவர்களாகவே இருக்கின்றனர்.
அவர்களுக்கு அதிகப்படியான பயிற்சி கொடுக்கவே இந்த 322ஆலகோ மந்திரம்!
இந்த மந்திரம் எப்படி வேலை செய்கிறது என்பதை சோதித்துப் பார்த்துவிட்டு தங்கள் பின்னூட்டத்தை அளித்தீர்களானால் மேற்கொண்டு என்னுடைய கணித முயற்சிகளை தொடர்வதற்கு அது உதவிகரமாக இருக்கும்.
சரி இப்போது மந்திரத்துக்கு வருவோம்!
ஒரு எட்டு இலக்க எண்ணை எடுத்துக்கொள்வோம்.
12345678-வலமிருந்து இடமாக 3இலக்கங்கள் பின்பு 2இலக்கங்கள் பின்பு மீண்டும் 2இலக்கங்கள் தள்ளி காற்புள்ளி இட வேண்டும் என்பதை வலியுறுத்தவே 322 என்று கொடுத்துள்ளேன்.
அடுத்தபடியாக மூன்றிலக்க எண்ணைப்படிப்பதில் மாணவர்களுக்கு அதிக சிரமம் இல்லை.எனவே வலமிருந்து இடமாக அடுத்த ஆயிரம்,பத்தாயிரம் இட இலக்கங்களுக்கு மேலே ஆயிரம் என்பதன் சுருக்கக் குறியீடாக ஆ என்ற எழுத்தையும், லட்சம்,பத்துலட்சம் இட இலக்கங்களுக்கு மேலே லட்சம் என்பதன் சுருக்கக் குறியீடாக ல என்ற எழுத்தையும், கோடி என்பதன் சுருக்கக்குறியீடாக கோ என்ற எழுத்தையும் குறிக்கும்படி செய்ய வேண்டும்.

கோ

1,
23,
45,
678

இப்போது ஒரு கோடியே, இருபத்துமூன்றுலட்சத்து, நாற்பத்தைந்தாயிரத்து, அறுநூற்றுஎழுபத்தெட்டு என எட்டு இலக்க எண்ணை மிக விரைவாகப் படிப்பார்கள்.நாளடைவில் மேலே எதுவும் சுருக்க குறியீடு எழுதாமலேயே, காற்புள்ளி வைக்காமலேயே விரைவாக படிக்கும் திறனை அடைவர்.
முயற்சித்துப்பார்த்துவிட்டு முடிவைக்கூறுங்கள்!!

தங்களின் பின்னூட்டதை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!!!

7 கருத்துகள்:

Unknown சொன்னது…

எளிய முறை! தெளிவான விளக்கம்!
படிக்கும் மாணவர்களுக்குப் பயன் தரும் பதிவு! அருமை!

Unknown சொன்னது…

Excellent

SAGADEVAN சொன்னது…

Nice

SAGADEVAN சொன்னது…

Nice

ICT Team சொன்னது…

அருமை...தங்களின் புத்தாக்க சிந்தனைகள் வளர வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

உங்களின் புதிய முயற்சி வீண் போகாது.மாணவர்களுக்கு மட்டுமல்ல
அனைத்து மக்களுக்கும் பயன் தரும் முயற்சி இது.வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

இன்று எனக்கே இந்த சந்தேகம் வந்தது ,ஆ ல கோ மூலம் தீர்ந்தது ,கோடானு கோடி நன்றி :)