நீங்கள் எந்த ஆண்டின் எந்த மாதத்தின் எந்த தேதியின் கிழமையையும் அறிந்து கொள்ள மிக எளிமையான புதிர்!
மாதத்தின் ரகசியக் குறி(ஜனவரி முதல் டிசம்பர் வரை):
”லீஃப்ஆண்டின்(7) முதல்(3) மாதம்(3) மட்டுமின்றி(6) நீ(1) அடுத்த(4) மாதத்திலும்(6) ஓர்(2) எண்ணிக்கை(5) குறைத்திட்டால்(7) கிழமை(3) பிழையாகுமா?(5)”
கிழமை காணும் முறை:
வருடமும், வருடத்தை நான்காக்கிய ஈவும், தேதியும், மாதத்தின் ரகசியக் குறியும் ஒன்றாக்கி, ஏழால் வகுக்கவரும் மீதி,
பூஜ்ஜியமெனில் வெள்ளி,
ஒன்றெனில் சனி,
இவ்வாறு முறை வைத்தால் கிழமை கிடைத்திடுமே!
12 கருத்துகள்:
அட... முயற்சித்துப் பார்த்துடலாம்..
வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/05/blog-post_11.html
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இன்றைய 11.05.2014 வலைச்சரம் மூலம் வருகை தந்துள்ளேன்.
இதில் தாங்கள் ஒரு தேதிக்கான கிழமை கண்டுபிடிக்கச் சொல்லியுள்ள வழிமுறைகள் சுத்தமாகப் புரிந்து கொள்ள முடியாத வகையில் உள்ளன.
தகுந்த சில உதாரணங்களுடன் விளக்கமாகச் சொல்லியிருந்தால் மட்டுமே அனைவராலும் புரிந்துகொள்ள இயலும்.
மாதத்தின் ரகசியக்குறிகள்:
ஜனவரி-7
பிப்ரவரி-3
மார்ச்-3
ஏப்ரல்-6
மே-1
ஜூன்-4
ஜூலை-6
ஆகஸ்டு-2
செப்டம்பர்-5
அக்டோபர்-7
நவம்பர்-3
டிசம்பர்-5
1.1947ஆகஸ்டு15
(Y+Y/4+D+Month Code)mod7
=(1947+486+15+2)mod7
=2450mod7(Q=350,R=0)
=0
FRIDAY
2. 2047ஆகஸ்டு15
(Y+Y/4+D+Month Code)mod7
=(2047+511+15+2)mod7
=2575mod7(Q=367,R=6)
=6
=THURSDAY
3. 1950ஜனவரி26
(Y+Y/4+D+Month Code)mod7
=(1950+487+26+7)mod7
=2470mod7(Q=352,R=6)
=THURSDAY
4. 1952ஜனவரி26
(Y+Y/4+D+Month Code)mod7 லீஃப் ஆண்டு என்பதால் ஜனவரிக்கான ரகசியக்குறியில் 1 குறைக்க வேண்டும்!
=(2052+513+26+6)mod7
=2597mod7(Q=371,R=0)
=0
FRIDAY மீதி 0 வந்தால் அன்று வெள்ளிக்கிழமை.
மீதி 1 வந்தால் அன்று சனிக்கிழமை.
மீதி 2 வந்தால் அன்று ஞாயிற்றுக்கிழமை.
மீதி 3 வந்தால் அன்று திங்கட்கிழமை
மீதி 4 வந்தால் அன்று செவ்வாய்க்கிழமை
மீதி 5 வந்தால் அன்று புதன்கிழமை
மீதி 6 வந்தால் அன்று வியாழக்கிழமை.
தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி!
சற்றே விளக்கத்திற்கு நன்றி.
இருப்பினும் மேலும் கொஞ்சம் விளக்கப்பட வேண்டும்.
இதை எல்லோராலும் அவ்வளவு சுலபமாகப் புரிந்துகொள்ள இயலாது.
மாதத்தின் ரகசியக் குறி(ஜனவரி முதல் டிசம்பர் வரை):
”லீஃப்ஆண்டின்(7) முதல்(3) மாதம்(3) மட்டுமின்றி(6) நீ(1) அடுத்த(4) மாதத்திலும்(6) ஓர்(2) எண்ணிக்கை(5) குறைத்திட்டால்(7) கிழமை(3) பிழையாகுமா?(5)” இதில் என்ன இருக்கிறது என்று கேட்கின்றீர்களா? இது ஒரு mnemonic வாக்கியம். அதாவது வேறு ஒன்றை நினைவிற்கொள்ள ஏற்படுத்தப்பட்ட வாக்கியம்.
இந்தப் பன்னிரண்டு வார்த்தை வாக்கியத்தைக் கவனித்து , ஒவ்வொரு வார்த்தையிலும் எவ்வளவு எழுத்துகள் உள்ளன என்று எண்ணிப் பார்த்தால், 7 3 3 6 1 4 6 2 5 7 3 5 என்ற எண்களை நினைவிற்குக் கொண்டு வரலாம். இவை ஜனவரி தொடங்கி டிசம்பர் வரை, ஒவ்வொரு மாதத்திற்கும், அந்த மாதத்திற்குரிய எண்.
இந்த எண்களால் என்ன பயன்?
இவைகளை வைத்துக்கொண்டு, எந்த வருடம், எந்த மாதம், எந்த தேதிக்கும் கிழமை கண்டு பிடிக்கலாம்.
எப்படி?
உதாரணத்திற்கு ஆகஸ்ட் பதினைந்து, 1947 என்ன கிழமை என்று கண்டுபிடிப்போம்.
a) முதலில் வருடத்தை எழுதிக்கொள்ளுங்கள் : 1947
b) பிறகு, வருடத்தை நான்கால் வகுத்து வருகின்ற ஈவுத் தொகை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். மீதியை மறந்துவிடுங்கள். 1947/4 = 486.75 = 486.
c) பிறகு தேதி = 15.
d) அடுத்தது மேலே கூறியுள்ள ஃபார்முலா பார்த்து, ஆகஸ்ட் மாதத்திற்கான எண் பார்க்க வேண்டும். 7 3 3 6 1 4 6 2 5 7 3 5 - இதில் எட்டாவது எண் = 2.
ஒருவேளை லீஃப் ஆண்டாக இருந்தால் இரகசியக்குறியில் 1 குறைத்துக் கொள்ள வேண்டும்!
அடுத்து, மேலே கண்டுள்ள a b c d நான்கு எண்களையும் கூட்டிக் கொள்ளுங்கள். அதாவது, 1947 + 486 + 15 + 2 = 2450.
அடுத்து, இந்த 2450 ஐ ஏழால் வகுக்க வேண்டும். மீதி வருகின்ற எண் எது என்று பார்த்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
2450 / 7 = 350, மீதி = 0.
மீதி 0 வந்தால் அன்று வெள்ளிக்கிழமை.
மீதி 1 வந்தால் அன்று சனிக்கிழமை.
மீதி 2 வந்தால் அன்று ஞாயிற்றுக்கிழமை.
மீதி 3 வந்தால் அன்று திங்கட்கிழமை
மீதி 4 வந்தால் அன்று செவ்வாய்க்கிழமை
மீதி 5 வந்தால் அன்று புதன்கிழமை
மீதி 6 வந்தால் அன்று வியாழக்கிழமை.
லீஃப் ஆண்டு வந்தால் ஜனவரி மற்றும் பிப்ரவரி ரகசியக்குறியில் மட்டுமே 1 குறைக்க வேண்டும்!
இப்போது தான் முற்றிலுமாகப் புரிகிறது.
விளக்கமாக புரியும்படி எடுத்துச் சொன்னதற்கு நன்றிகள்.
நான் ஏற்கனவே ஸ்கூலில் படிக்கும் காலத்தில் இதனைப்பற்றி கேள்விப்பட்டுள்ளேன்.நடுவில் அது எப்படி என்பது எனக்கு மறந்து போய் விட்டது.
அதனால் தான் தங்களை மீண்டும் மீண்டும் இது சம்பந்தமாகத் தொந்தரவு செய்து விட்டேன்.
ஆனால் இங்கு வருகை தந்து கருத்தளிக்கும் யாராலும் இவற்றையெல்லாம் லேஸில் புரிந்து கொள்ள இயலாது. புரிந்துகொள்ள முயலவும் மாட்டார்கள்.
சும்மா வருவார்கள், ஏதோ கடனுக்கு ஓர் கருத்து எழுதுவார்கள், செல்வார்கள்.
கணிதத்தில் பலருக்கும் மூளை வேலை செய்யாது. சிலருக்கு மட்டுமே இதிலெல்லாம் ஆர்வம் இருக்கும்.
இதுபோன்ற மூளைக்கு வேலை தரும் பல பதிவுகள் கொடுத்துள்ள எனக்கு இதிலெல்லாம் நல்ல அனுபவம் உண்டு.
நன்றியுடன் VGK
THANK U SO MUCH FOR U AND GOPALAKRISHNAN SIR.
really good....
really good....
கருத்துரையிடுக