ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

குழுப்பணியாற்றுதல்

முன்னேற்றப் பாதையிலே
எல்லோருமே செல்லலாமே!
முன்னின்று பணியாற்ற
முன்னேற்றம் தானாய் வரும்!
நாம் செயலை செய்யும் முன்பு
திட்டம் தீட்டினால்தான்
முன்னேற்றம் உறுதியாகும்!

மாற்றாரின் கருத்துக்கும்
மதிப்பளிக்க வேண்டாமா?
நண்பர் பகைவரென்று
பாகுபாடு பார்க்கலாமா?
நாம் எதிராளி வீட்டுமரத்து
இலந்தைக்கும் ருசி உண்டு!
என்பதை உணர வேண்டும்!

கடலளவு சொல்லை விடவும்
கடுகளவு செயலே போதும்!
தயக்கம் உடன் இருந்தால்
தொடங்காற்றல் வந்திடுமா?
நாம் பூனைக்கு மணிகட்ட
முயற்சித்த எலிகள் போல்
தயங்கி நிற்கக் கூடாது!

குடிநீர்க்குழாய் சொட்டுமாறு
அரைகுறையாய் மூடலாமா?
ஆளில்லா அறையினிலே
மின்விசிறி ஓடலாமா?
நாம் சின்னச்சின்ன செயல்களிலே
பொறுப்போடு நடந்து கொண்டு
முன்மாதிரியாக இருப்போம்!

விமர்சனங்கள் அடுத்தவர் உரிமை
விளக்கமளிப்பது நம்மோட கடமை!
பூக்கள் மட்டும் இன்றி
கற்களும் மேலே விழும்!
நாம் பூக்கள் கண்டு மயங்காமல்
கற்கள் கண்டு கலங்காமல்
முன்னேறி நடந்தால் வெற்றி!

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இன்றைக்கு மிகவும் முக்கியமான... என்றைக்கும் தேவையான முக்கியமான இரு பொறுப்புக்களோடு சிறப்பான வரிகள்... பாராட்டுக்கள்... நன்றி...

தொடர வாழ்த்துக்கள்...

சே. குமார் சொன்னது…

நன்று...