- வசதியான ஆசனத்தில் உட்காரவும்.இரண்டு நாசிகள் வழியாக பலமாக நுரையீரல் நிரம்பும் வரை சுவாசிக்கவும்.கைகளில் ஞானமுத்திரை இருக்கட்டும்.
- வயிற்றுப்பகுதி வீங்கா வண்ணம் சுவாசிக்க வேண்டும்.
- 2 நிமிடம் முதல் 5 நிமிடம் வரை செய்யலாம்.
- சுவாசம் செய்யும் போது ‘ஓம்’ என்ற மந்திரத்தை நினைக்கவும்.
- சோர்வு அடையும் வரை இரண்டு நாசிகள் வழியாக காற்றை உள்ளே இழுத்து வெளிவிட வேண்டும்.
பலன்கள்:
- அனைத்து வகை சுவாச நோய்களான சளி,இருமல்,ஒவ்வாமை சரி செய்யப்படுகின்றன.
- இதயம்,நுரையீரல்,மூளைக்கு அதிக ப்ராணன் கிடைப்பதால் அவைகள் திடமாகி நோய் எதிர்ப்பு திறனை பெறுகின்றன.
- தொண்டை சம்மந்தப்பட்ட தைராய்டு,டான்சில் நோய்கள் குணமடைகின்றன.
- வாதம்,பித்தம்,கபம் இவைகள் சமன் செய்யப்படுகின்றன.
- மனதை அமைதிப்படுத்தி மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தியை எழுப்ப உதவுகிறது.
செய்யக்கூடாதவர்கள்:
- உயர் இரத்த அழுத்தம்,இதய நோய் இருப்பவர்கள் செய்யக்கூடாது.
1 கருத்து:
ஆரம்பத்தில் சிறிது சிரமம் இருந்தாலும் தினமும் தொடர்ந்தால் பழகி விடும்...
மிகவும் பயனுள்ள தகவல்...
நன்றி சார்..
கருத்துரையிடுக