குழந்தைப்பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழந்தைப்பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 ஜூலை, 2020

குறை ஒன்றும் இல்லை... மறைமூர்த்திக் கண்ணா...

நிறை அனைத்தும் தந்தாய் நீதானே இறைவா

நிறை அனைத்தும் தருகிறாய் இறைவா

நிறை அனைத்தும் தருவாய் பேரிறைவா

நிறை அனைத்தும் தந்தாய் நீதானே இறைவா

நிறை அனைத்தும் தருகிறாய் இறைவா

நிறை அனைத்தும் தருவாய் பேரிறைவா

நீக்கமற எங்கெங்கும் நிறைகிறாய் இறைவா

ஆக்கமுறு என்செயல்கள் யாவிலும் துணைநின்று

நிறை அனைத்தும் தந்தாய் நீதானே இறைவா

நாடுவது வேண்டுமென்றால் நாடுவதே தீர்வு அன்றோ

என்னுடைய நாட்டம் எல்லாம் நீதானே இறைவா

பேரண்டம் பேராற்றல் பேரன்பின் ஓர்வடிவம் நீதானே பேரிறைவா

 

அங்கிங்கெனாதபடி எங்கெங்குமே இருக்கிறாய்

இறைவா அங்கிங்கெனாதபடி எங்கெங்குமே இருக்கிறாய் –உன்னை

மெய்ஞானம் தேடுவோர் யாவரும் அடைவார்

அங்கிங்கெனாதபடி எங்கெங்குமே இருக்கிறாய் –உன்னை

மெய்ஞானம் தேடுவோர் யாவரும் அடைவார்

உனக்காக எதை நான் தருவேன் இறைவா

உனக்காக எதை நான் தருவேன் இறைவா

வேண்டுவதை வேண்டுவோர்க்கு தருகின்றாய் வரமாய்

வேண்டுவதை வேண்டுவோர்க்கு தருகின்றாய் வரமாய்

நிறைஅனைத்தும் தந்தாய் நீதானே இறைவா

நிறை அனைத்தும் தந்தாய் நீதானே இறைவா

பேரண்டம் பேராற்றல் பேரன்பின் ஓர்வடிவம் நீதானே பேரிறைவா

 

வானாக இருப்பதறிய செவியினைப் படைத்து

வளியாக இருப்பதறிய மெய்யினைப் படைத்தாய் இறைவா

நீராக இருப்பதறிய நாக்கினைப் படைத்து

நிலமாக இருப்பதறிய மூக்கினைப் படைத்தாய் இறைவா

கனலாக இருப்பதறிய கண்களைப் படைத்தாய்

யாதும் நீயாகிய பேரிறைவா

யாதும் நீயாகிய பேரிறைவா-எதை நானறிய

ஆறாம் அறிவாகிய மனதைப் படைத்து வைத்தாய்?

மனதை அடக்க ஏது வழி எனக்கு?

மனதை அடக்க ஏது வழி எனக்கு?

அனைத்தும் நிறைவாக தந்தாய் இறைவா

அனைத்தும் நிறைவாக தந்தாய் இறைவா

பேரண்டம் பேராற்றல் பேரன்பின் ஓர்வடிவம் நீதானே பேரிறைவா

பேரன்பின் ஓர்வடிவம் நீதானே பேரிறைவா...

 -கு.சீனுவாசன்

ஞாயிறு, 3 நவம்பர், 2013

ஒருங்கமைப்பு

INCLUSION
To be a part
And not stand apart
To belong
And not to be isolated
To have friends
And not just companions
To feel needed
And not be just a person with needs
To participate
And not just be a spectator
To have responsibilities
And not just enjoy rights
To have opportunities
And not favours
Is to be really ‘included’
           -Dipti Bhatia
ஒருங்கமைப்பு
எங்கும் எதிலும் விலகி நில்லாமல்
ஓர் அங்கமாக சேர்ந்து இரு!
தனித் தனியாய் பிரிந்து செல்லாமல்
நீ ஒற்றுமையாய் இணந்து இரு!
புறம் பேசும் உறவு கலவாமல்
இடுக்கண் களையும் நட்பு கொண்டிரு!
உன் தேவை மட்டும் எண்ணாமல்
ஊரார் துன்பம் நீக்க உதவிடு!
வேடிக்கை பார்த்தபடி சும்மா இராமல்
நாடிச்சென்று சேவை செய்திடு!
உரிமையை கேட்பதோடு நின்று விடாமல்
கடமையையும் கருத்தாய் செய்திடு!
சலுகையை கேட்பதோடு நின்று விடாமல்
நல் வாய்ப்புகளையும் பயன்படுத்து!
உண்மையில் இவைகள் எல்லாமே
ஒன்றோடொன்று இணைந்தே உள்ளது!

                           -தீப்தி பாட்டியா

வியாழன், 10 அக்டோபர், 2013

கீதாஞ்சலி

WHERE THE MIND IS WITHOUT FEAR
Where the mind is without fear and the head is held high;
Where knowledge is free;
Where the world has not been broken up into fragments by narrow domestic walls;
Where words come out from the depth of truth;
Where tireless striving stretches its arms towards perfection;
Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit;
Where the mind is led forward by thee into ever-widening thought and action
Into that heaven of freedom, my Father, let my country awake.

-Rabindranath Tagore
மனம் அச்சமின்றி தலைநிமிர்ந்து
எங்கு நிற்குமோ…
அந்த சுதந்திர சொர்க்கத்திற்கு என்நாடு
விழித்துச் செல்ல வேண்டும் தந்தையே!

கல்வி இலவசமாய் அனைவருக்கும்
எங்கு கிடைக்குமோ…
அந்த சுதந்திர சொர்க்கத்திற்கு என்நாடு
விழித்துச் செல்ல வேண்டும் தந்தையே!

உலகம் பூசல்களால் பிரியாமல்
எங்கு உள்ளதோ…
அந்த சுதந்திர சொர்க்கத்திற்கு என்நாடு
விழித்துச் செல்ல வேண்டும் தந்தையே!

சொற்கள் உண்மையின் அடிப்படையில்
எங்கு தோன்றுமோ…
அந்த சுதந்திர சொர்க்கத்திற்கு என்நாடு
விழித்துச் செல்ல வேண்டும் தந்தையே!

விடாமுயற்சி திருத்தம் நோக்கி
எங்கு செல்லுமோ…
அந்த சுதந்திர சொர்க்கத்திற்கு என்நாடு
விழித்துச் செல்ல வேண்டும் தந்தையே!

சிந்தனையோடை பழக்கத்தினால் தொலையாமல்
எங்கு ஓடுமோ…
அந்த சுதந்திர சொர்க்கத்திற்கு என்நாடு
விழித்துச் செல்ல வேண்டும் தந்தையே!

உள்ளத்தை விரிந்துபரந்த எண்ணம்செயல்
எங்கு நடத்துமோ…
அந்த சுதந்திர சொர்க்கத்திற்கு என்நாடு
விழித்துச் செல்ல வேண்டும் தந்தையே!
-மகாகவி இரவீந்திரநாத தாகூர்.

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

வெளிப்படுத்துதல்


குறிக்கோளை நோக்கிய எண்ணம்
கொண்டவருக்கே வெற்றிக் கிண்ணம்!
கட்டை விரல் உயர்த்து
அகிலமே வியக்கும் வண்ணம்!
நாம் தெளிவான மனநிலையும்
வலுவான சிந்தனையும்
கொண்டிருந்தால் ஜெயிப்பது திண்ணம்!

சாதனைக்கதைகள் சிலருக்கே தெரியும்!
கேட்டுப்பார்த்தால் உண்மை புரியும்!
உற்றுக் கேட்க கேட்க
லட்சியம் தணலாய் எரியும்!
நாம் வாயினை மூடிவைத்து
காதுகளைத் திறந்தால்தான்
நமது உலகம் இன்னும் விரியும்!

இவன் என்ன சொல்லுவது?
நாம் என்ன கேட்டுக் கொள்வது?
என்று நினைப்பது சிறுமை!
நினைப்பை மாற்றினால் அருமை!
நாம் குற்றம்குறை பாராமல்
நம்கருத்தை பகிர்ந்து கொண்டு
மீள்கருத்தை ஏற்றால் பெருமை!

உள்ளம் என்றால் லட்சியம் வேண்டும்!
லட்சியம்தானே நம்மைத் தூண்டும்!
லட்சிய உள்ளத்தினை
இன்னல்கள் எவ்வாறு தீண்டும்?
நாம் நினைத்ததை தொடங்கிடவும்
தொடங்கியதை முடித்திடவும்
லட்சியத்தில் உறுதி வேண்டும்!

இல்லாதோர் இன்னல் கண்டு
கண்களிலே கண்ணீர் வார்ப்போம்!
ஒன்றிணைந்து கைகள் கோர்ப்போம்!
நலிந்தோர்க்கெல்லாம் நன்மை சேர்ப்போம்!
நாம் தேவையான நேரத்தில்
தேவையான உதவி செய்து
இன்னலை தீர்க்கப் பார்ப்போம்!

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

குழுப்பணியாற்றுதல்

முன்னேற்றப் பாதையிலே
எல்லோருமே செல்லலாமே!
முன்னின்று பணியாற்ற
முன்னேற்றம் தானாய் வரும்!
நாம் செயலை செய்யும் முன்பு
திட்டம் தீட்டினால்தான்
முன்னேற்றம் உறுதியாகும்!

மாற்றாரின் கருத்துக்கும்
மதிப்பளிக்க வேண்டாமா?
நண்பர் பகைவரென்று
பாகுபாடு பார்க்கலாமா?
நாம் எதிராளி வீட்டுமரத்து
இலந்தைக்கும் ருசி உண்டு!
என்பதை உணர வேண்டும்!

கடலளவு சொல்லை விடவும்
கடுகளவு செயலே போதும்!
தயக்கம் உடன் இருந்தால்
தொடங்காற்றல் வந்திடுமா?
நாம் பூனைக்கு மணிகட்ட
முயற்சித்த எலிகள் போல்
தயங்கி நிற்கக் கூடாது!

குடிநீர்க்குழாய் சொட்டுமாறு
அரைகுறையாய் மூடலாமா?
ஆளில்லா அறையினிலே
மின்விசிறி ஓடலாமா?
நாம் சின்னச்சின்ன செயல்களிலே
பொறுப்போடு நடந்து கொண்டு
முன்மாதிரியாக இருப்போம்!

விமர்சனங்கள் அடுத்தவர் உரிமை
விளக்கமளிப்பது நம்மோட கடமை!
பூக்கள் மட்டும் இன்றி
கற்களும் மேலே விழும்!
நாம் பூக்கள் கண்டு மயங்காமல்
கற்கள் கண்டு கலங்காமல்
முன்னேறி நடந்தால் வெற்றி!

திங்கள், 1 ஏப்ரல், 2013

பகுத்தறிதல்


நம்திறமை நாமறிந்தால்
நினைத்தவாறு வெற்றி கிட்டும்!
திறமையை வெளிப்படுத்த
குறிக்கோள் வேண்டுமன்றோ?
நாம் குறிக்கோளை அடைவதற்கு
சரியான அணுகு முறையை
தேர்ந்து எடுக்க வேண்டும்!

அண்டப்புளுகு புளுகுவோரை
அப்படியே நம்பலாமா?
ஏன்? எப்படி?எதற்கு?என்று
கேள்விகள் கேட்டிட வேண்டாமா?
நாம் தென்னையிலே தேள்கொட்ட
பனையிலா நெறி கட்டும்?
பகுத்தறிந்து பார்க்க வேண்டும்! 

இயற்கையின் மேல் குறையில்லை!
இயைந்து வாழ்ந்தால் குற்றமில்லை!
வற்றும் வளங்கள் தீர்ந்தால்
வருங் காலம் என்னாவது?
நாம் இக்கட்டான சூழ்நிலையை
எதிர் கொள்ளும் நடவடிக்கை
இப்போதே எடுக்க வேண்டும்!

உண்ணும் உணவே மருந்தாகும்!
உணர்ந்தாலே உடல் நலமாகும்!
உணவு பழக்கத்திலே
கட்டுப்பாடு வேண்டாமா?
நாம் சைவம் என்றாலும்
அசைவம் என்றாலும்
அளவாக உண்ண வேண்டும்!

முட்டாள் சொல்வான் முடியாது!
முயற்சிக்காமல் விடிவேது?
தொடர்ந்து முயற்சிப்பதை
தோல்வி என்றா சொல்லுவது?
நாம் மந்திரத்தில் மாங்காய்கள்
ஒருபோதும் விழாதென்று
உணர்ந்து உழைக்க வேண்டும்!

ஞாயிறு, 31 மார்ச், 2013

துணிந்துரைத்தல்


வாழ்க்கை ஒரு புல்லாங்குழல்
வாசிக்கத்தான் நேரம் இல்லை!
பணமே வாழ்க்கை என்றால்
ஆடிப்பாட நேரம் ஏது ?
நாம் மனதைக் கட்டுப்படுத்தும்
மந்திரத்தை அறிந்து கொண்டு
மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வோம்!

எவரெஸ்டு சிகரம் கூட
எட்டுகின்ற உயரம் ஆச்சே!
நீயும் நானும் கூட
நிலவுக்கே போய் வரலாம்!
நாம் வெற்றிக் கொடி நட்டு
பேரை நிலை நாட்டி
இன்னும்பல சாதனை செய்வோம்!

தீயோரை காண்பதுவும்
தீயோர் சொல் கேட்பதுவும்
தீமை தானே தரும்!
வேறென்ன நன்மை வரும்?
நாம் கெட்ட நோக்கோடு
தொட்டுப்பேசும் கயவரை
எட்டிமிதிக்க கற்றுக் கொள்வோம்!


முதுகுக்கு பின்னால் நின்று
செய்யும் செயல் ஒன்றே ஒன்று!
அதை நான் சொல்வேன் இன்று!
காது கொடுத்து கேட்டால் நன்று!
நாம் வஞ்சக எண்ணமின்றி
வளர்ந்திட வாழ்த்துச் சொல்லி
தட்டிக்கொடுக்க பழகிக் கொள்வோம்!

நட்புக்கு எல்லை இல்லை
நாடு தாண்டி விரியட்டுமே!
முகநூல் மூலம் கூட
கைகள் குலுக்கலாமே!
நாம் அறிமுகமே இல்லாத
நபர்களோடு பழகும் போது
எச்சரிக்கை அதிகம் கொள்வோம்!

திங்கள், 25 மார்ச், 2013

தன்னையறிதல்


யானை பலம் தும்பிக்கை
மனித பலம் தன்னம்பிக்கை!
கேலி கிண்டல் கண்டு
தன்னம்பிக்கை
தூளாவதா?
நாம் தன்னம்பிக்கை தளராமல்
முயற்சியோடு
பயிற்சி செய்து
முன்னேறிக் காட்ட வேண்டும்!

மரியாதை தரும் பழக்கம்
தமிழருக்கு குல வழக்கம்!
இதற்கு ஏன் சுணக்கம்?
இருகை கூப்பி வைப்போம் வணக்கம்!
நாம் அன்னை தந்தை மட்டுமின்றி
ஆசான் இறைவன் மட்டுமின்றி
மாற்றாரிடமும் கொள்வோம் இணக்கம்!

தனித்தன்மை இல்லா மனிதன்
உலகினிலே யாரும் இல்லை!
உள்ளத்தின் ஒருமைப்பாட்டில்
ஒளிந்துள்ளது வெற்றியின் சாவி!
நாம் தன்திறமை அறிந்து கொண்டால்
தவறுகளை திருத்திக் கொண்டால்
வெற்றி மேல் வெற்றி வரும்!

நொடிப்பொழுதும் வீணாக்காமல்
நேர்மையாக உழைத்துப் பாரு!
உழைத்து பார்க்கும் போது
தலை தானாய் நிமிரும் பாரு!
நாம் சூழலுக்கு ஏற்றாற் போல்
நேர்மறையாய் முடிவெடுத்தால்
தோல்வி தூர ஓடும் பாரு!

நமக்கு எது பிடிக்குமென்று
நமக்குத்தானே நன்றாய் தெரியும்!
பிடித்ததை விடாப்பிடியாய்
பிடித்துக் கொண்டாலே வெற்றி வரும்!
நாம் வெற்றி அடைந்தாலும்
தோல்வி அடைந்தாலும்
சுயமுடிவு எடுத்திட வேண்டும்!


திங்கள், 18 பிப்ரவரி, 2013

தாலாட்டு...



சீதனமாய் வரும் செல்வம்
சித்திரமே நமக்கெதுக்கு...
கண்மணியே கண்ணுறங்கு
வருங்காலம் நமக்கிருக்கு...

கண்ணான கண்மணியே
காது குத்த போறோமின்னு
பொன்னான மாமனுக்கு
போடாதம்மா கடுதாசி

தங்கத்துல தோடு போட
மகளே தோது இல்லை
சந்தையில வாங்கித் தாரேன்
தங்கமே நீ போட்டுக்கம்மா

பட்டாடை உடை உடுத்த
மகளே வசதி இல்லை
ஆடி தள்ளுபடியில்
ஆடை வாங்கித் தாரேன்

பொத்தலான உடை பார்த்து
எத்தனையோ கேலி கிண்டல்
அத்தனையும் தச்சுத் தாரேன்
ஊசி நூலு இருக்குதம்மா

மாடி மேல மாடி கட்ட
நாதி இல்லை எம்மகளே
ஓல குடிசை இருக்கு
ஒரு முழம் பாய் இருக்கு

சுடுசோறு பலகாரம்
ஆக்கித்தர முடியலையே
கூழும் கஞ்சியும் தான்
குடிச்சி நீ வளர்ந்துக்கம்மா

காலுக்கு கொலுசு இல்லை
காலணி வாங்கித் தாரேன்
முள்ளும் கல்லும் குத்தாம
பள்ளிக்கு நீ போயிவாம்மா

விளக்கு எரியாமல்
எண்ணெய் இன்றி கிடக்குதம்மா
வீதியோரம் எரிஞ்சாக்கா
வெளியில் வந்து படிச்சிக்கம்மா

வாழ்க்கையில் முன்னேற
ஒருகையும் உதவாவிட்டால்
தன்னம்பிக்கை இருக்குதம்மா
வேறு கை எதுக்கம்மா?



செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

வெளிக்கோணம்


சின்னத்தம்பி சின்னப்பாப்பா
முக்கோணத்தின் பண்புகளில்
முக்கியமான பண்பு ஒன்றை
மெட்டுக்கட்டி பாட்டிலே
பாடப்போறேன் கேட்டுக்கோ...

ஒருமுக்கோணத்தின் ஏதேனுமொரு
பக்கத்தை நீட்டினால்
ஏற்படும் வெளிக்கோணம்
அதன் உள்ளெதிர்க் கோணங்களின்
கூடுதலுக்குச் சமமாகும்...

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

கணிதமேதை யூக்ளிட்



பெங்கலி பெங்கா பெங்கலி பெங்கா
பெங்கலி பெங்காலே...
பெங்கலி பெங்கா பெங்கலி பெங்கா
பெங்கலி பெங்காலே...

கிரேக்கக்கணித மேதையான
யூக்ளிட்தானே...
வடிவியலின் தந்தையென்று
போற்றப்பட்டாரே... (பெங்கலி பெங்கா...)

தர்க்க அடிப் படையிலான
சிந்தனைகளை...
வடிவியலில் முதன்முதலாய்
கொண்டுவந்தாரே... (பெங்கலி பெங்கா...)

யூக்ளிட் எலமன்ட்ஸ் என்ற
புத்தகங்களை...
(கி.மு.)- முந்நூறில்
நமக்கு தந்தாரே... (பெங்கலி பெங்கா...)

ஒருமுழுமை அதன் எந்த
பகுதிகளை விடவும்...
பெரியதாகும் என்ற கருத்தை
நமக்கு சொன்னாரே... (பெங்கலி பெங்கா...)

சனி, 18 ஆகஸ்ட், 2012

முக்கோணம்



ஆசையாக பென்சில் எடுத்து
ஒரு புள்ளி வைத்து நானும்
முக்கோணத்தை வரைந்து பார்த்தேன்
வரவேயில்லை!முக்கோணம் வரவேயில்லை!

அருகருகே அமையுமாறு
இரண்டு புள்ளி வைத்து நானும்
முக்கோணத்தை வரைந்து பார்த்தேன்
வரவேயில்லை!முக்கோணம் வரவேயில்லை!

நேர்க்கோட்டில் அமையுமாறு
மூன்று புள்ளி வைத்து நானும்
முக்கோணத்தை வரைந்து பார்த்தேன்
வரவேயில்லை!முக்கோணம் வரவேயில்லை!

நேர்க்கோட்டில் அமையாமல்
மூன்று புள்ளி வைத்து நானும்
முக்கோணத்தை வரைந்து பார்த்தேன்
ஆகா!வந்துவிட்டது!முக்கோணம் வந்துவிட்டது!

சனி, 11 ஆகஸ்ட், 2012

திசைப்பாடல்


கொக்கரக்கோ சேவல் ஒண்ணு
சத்தமாக கூவுதம்மா
சத்தமாக கூவியதால்
நித்திரையும் கலைந்ததம்மா!

கிழக்காலே சூரியனும்
காலையிலே தோணுதம்மா
காலையிலே தோணுகையில்
தாமரைப்பூ பூக்குதம்மா!

மேற்காலே சூரியனும்
மாலையிலே மறையுதம்மா
மாலையிலே மறைகையில்
அல்லிமலர் பூக்குதம்மா!

வடக்காலே இமயமும்
வானுயர நிக்குதம்மா
வானுயர நிக்குமது
இந்தியாவைக் காக்குதம்மா!

தெற்காலே குமரியில்
முக்கடலின் சங்கமமம்மா
முக்கடலின் சங்கமத்தில்
வள்ளுவரின் சிலையம்மா!

வெள்ளி, 27 ஜூலை, 2012

வடிவியல் உருவங்கள்




வண்ண நிலவோ வட்டம்
வட்டத்தை பாதியாக்கும்  விட்டம்!

வரைவேன் சதுரக் கட்டம்
வானத்தில் பறப்பது பட்டம்!

எழுதும் பலகை செவ்வகம்
எதிர் எதிர் பக்கங்கள் சமம்!

முக்கோணத்தின் கோணங்கள் மூன்று
அக்கோணங்களை  கூட்டினால் நூற்றுஎண்பது!

அடடா என்ன அருமையடா
வடிவியல் உருவங்கள் ஒவ்வொன்றும்!


புதன், 18 மே, 2011

"வ"வரிசைப்பாட்டு



வயலூர் என்றொரு கிராமத்தையே
வாருங்கள் போய் பார்த்து வரலாம்
விழாக்கள் கொண்டாடும் சமயத்திலே
வீர விளையாட்டுக்கள் அங்குண்டு
வுபாத்தியாயரிடம் பயின்றிடவே
வூருக்குள்ளே பள்ளியுண்டு
வெட்டியாய் பொழுதை கழிக்காமல்
வேலை செய்யும் மக்களுண்டு
வைகை ஆறும் அங்குண்டு
வொன்றாய் நன்றாய் வசித்திடவே
வோட்டு வீடுகளும் அங்குண்டு
வௌவால் வந்து பழம் தின்னும் 
செவ்வாழை மரங்களும் அங்குண்டு! 

"ல"வரிசைப்பாட்டு



லட்டு நிறைய வேண்டுமென்று
லாரன்ஸ் பையன் கேட்கின்றான் 
லிப்ஸ்டிக் நிறைய வேண்டுமென்று
லீலா பொண்ணு கேட்கின்றாள் 
லுங்கி நிறைய வேண்டுமென்று
லூக்காஸ் மாமா கேட்கின்றார் 
லெஸ்சி நிறைய வேண்டுமென்று
லேடி ஒருத்தி கேட்கின்றாள் 
லைஃப்பில் ஆளுக்கொரு ஆசைதான்
லொக்லொக் என்று இருமிக்கொண்டு
லோகநாதன் தாத்தா சொல்கின்றார்
லௌகீக வாழ்வை முறை செய்தால்
தொல்லை வாழ்வில் என்றும் இல்லை! 

"ர"வரிசைப்பாட்டு



ரத்தம் குடிக்கின்ற ஓநாயாம்
ராபர்ட்கிளைவ் என்ற ஆங்கிலேயன்
ரிப்பன் வளையல் விற்க வந்தான் 
ரீல் விட்டு ராஜாக்களை பிரித்து வைத்தான் 
ருசி கண்ட பூனை அவன் தந்திரத்தால் 
ரூபம் இன்றி போனது பாரதம் 
ரெடிமேட் பொருட்களை அவன் செய்ய 
ரேகை தேய நாம் உழைத்தோம் 
ரைட் லெப்ட் நம்மையே போடவைத்தான் 
ரொட்டி துண்டுக்கு அலைய வைத்தான் 
ரோபோ போல நடத்தி வைத்தான் 
ரௌலட் சட்டத்தால் அடக்கி வைத்தான் 
பார் தம்பி வரலாற்றை புரட்டி பார்!  

"ய"வரிசைப்பாட்டு



யப்பா யப்பா ஐயப்பா
யானை வருது பாரப்பா
யிறங்கி கீழே வருதப்பா
யீரல் குலையும் நடுங்குதப்பா
யுத்தம் மனசுக்குள் நடக்குதப்பா
யூர்யா கடை முன் நிக்குதப்பா
யெத்தனை அழகாய் தும்பிக்கையை
யேந்தி தட்சணை கேக்குதப்பா
யை யை என்று நடுங்கும் உன்னை
யொன்றும் செய்யாத யானையப்பா
யோகம் வருமே நம்பப்பா
யௌவனம் மிக்க யானையிடம்
அய்யோ என்று பயப்படாதப்பா!

"ம"வரிசைப்பாட்டு



மடமட என்று கிளம்புவாரு
மாடி வீட்டு காவலரு
மிடுக்காய் சீருடை அணிவாரு
மீசையை முறுக்கி நடப்பாரு
முட்டிக்கு முட்டி தட்டுவாரு
மூக்கு மேலேயே குத்துவாரு
மெல்லமெல்ல பதுங்கி போய்
மேலே பாய்ந்து பிடிப்பாரு
மைதிலி வீட்டில் ஒரு தடவை
மொட்டை தலையன் திருடி சென்ற
மோதிரம் செயினை மீட்டாரு
மௌனமாய் திருட்டுகள் செய்தவனை
கம்பிகள் எண்ண வைத்தாரு!

"ப"வரிசைப்பாட்டு



பட பட பட்டாம் பூச்சிகள்
பாருங்கள் எந்தன் கண்ணுக்குள்
பித்தம் தலையில் ஏறியதோ
பீப்பீ சத்தம் காதுக்குள்
புத்தம் புதிய குண்டு மல்லி
பூக்கும் வாசனை மூக்குக்குள்
பெரிதாய் கற்பனை செய்தபடி
பேசிக் கொள்கிறேன் வாய்க்குள்
பைத்தியம் பிடித்தது உடம்புக்குள்
பொத்தி வைத்த கார்முகிலின்
போர்வைக்குள் இருந்து தலை காட்டும்
பௌர்ணமி நிலவை நீ ரசித்தால்
அப்பப்பா உனக்கும் இது நடக்கும்!